பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 பேராசிரியர் ந.சஞ்சீவி ஜூன் 22 ஆம் நாள் மீண்டும் கம்பெனிப் பட்டாளம் தமிழ் மறவர் படையை அடக்க மார் தட்டிப் புறப்பட்டது. பழமனேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பலம் பொருந்திய கமுதிக் கோட்டையில் ஆரம்பித்த கம்பெனிப் படைகளின் முகாம் சிறுவயல் வரை நீண்டு கொண்டே சென்றது. இந்த இடைக்காலத்தில்-எட்டு நாள்களில் கம்பெனிப் படைகள் கண்ட இழப்புப் பெரிது; 6 வெள்ளையர்களும் 6 சுதேசிகளும் கொல்லப்பட்டார்கள். மூன்று வெள்ளை அதிகாரிகளும், 16 ஐரோப்பியர்களும், 36 சுதேசிகளும் படுகாயம் அடைந்தார்கள். இந்த எட்டு நாள் போரில் நாலாயிரம் பேர் வீர மறவர் தாக்கியும் தற்காத்தும் போர் புரிந்தனராம். கம்பெனிப் பட்டாளம், இவர்கள் படுத்தும் கொடுமை பொறாமல், நள்ளிரவில் ஒக்கூர் என்ற கிராமத்தையே தீயிலிட்டுச் சாம்பலாக்கியது. கிராமங்கட்கு எல்லாம் தீயிட்டுக் குடி மக்கட்குச் சொல்லொணாத் துன்பமும் அவமானமும் இழைத்து முன்னேறி வந்த கம்பெனிப் பட்டாளம், கடைசியாக மருது பாண்டியரின் தலைநகரான சிறு வயல் நகருக்குள்ளேயே நுழைந்தது வீர மறவர் கம்பெனிப் பட்டாளத்தை எதிர்த்துக் கடும்போர் நடத்தினர். பாஞ்சைப் பதியிற்போலவே இங்கும் வீர மறவர்களிடம் பேய் வாய்ப் பீரங்கிகளும் ஏராளமான வெடி மருந்துகளும் இல்லாமையாலும், மேலும் மேலும் துரோகிகளால் கம்பெனிப் படைக்குப் பலம் பெருகியதாலும் - அனல் மழை பொழியும் கம்பெனிப் பட்டாளத்தின் சீற்றம் நிறைந்த தாக்குதலுக்குத் தமிழர் படை பின் வாங்க நேர்ந்தது. ஆனால், வீர மறவர்கள், அவ்வாறு பின் வாங்க நேர்ந்ததை அறிந்து, அழகின் வடிவாய் விளங்கிய தங்கள் அருமைத் தலைநகராகிய சிறுவயலைத் தீக்கு இரையாக்கி, அந்நகரில் ஒர் அங்குலங்கூட அயலானுக்குப் பயன்படாதவாறு செய்துவிட்டுத் திரும்பினார்கள். இவ்வாறு ஆத்திரம் கொண்ட வீரமறவர்கள் வைத்த வெந்தீக்கு இரையான அழகு மிக்க சிறுவயல் நகரின் சிறப்பை அக்காலத்தில் நேரிற்கண்ட கர்னல் வெல்ஷ் சித்திரித்துக் காட்டியுள்ளதைப் பாருங்கள்: 'மருது பாண்டியரின் அரண்மனை ஆரவாரமான தோற்றத்தைவிட எளிமை கலந்த அழகிற்கே பேர் பெற்று விளங்கியது; சிறியதாயினும், உறுதியாகவும் நன்றாகவும் கட்டப்பட்டிருந்தது அவ்வரண்மனை. சிறுவயல் நகரத்தின் வீதிகள் அகலமாகவும் ஒழுங்காகவும் அமைக்கப்பட்டிருந்தன. அவ்வீதிகளுள் ஒன்றில் அழகிய மரச்சாலை ஒன்று அமைந்திருந்தது. மொத்தத்தில் அந்த நகரம் இந்தியாவில் நான் கண்ட வேறு நகரங்களைக் காட்டிலும் மிகுந்த அழகும் சிறப்பும் பொருந்தியதாகவே விளங்கியது. இத்தகைய சிறந்த நகரைத்தான் மருது பாண்டியர் படை தன்மான உணர்ச்சி காரணமாகத் தீயிட்டுக் கரியாக்க நேர்ந்தது. என்னே காலத்தின்