பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 பேராசிரியர் ந.சஞ்சீவி அறிந்த எண்ணற்ற மக்கள், மண்ணாசையால் அறிவிழந்து, ஆங்கிலக் கம்பெனிக்குச் சலாம் போடத் தொடங்கினார்கள். கம்பெனியார் பரப்பிய மற்றொரு பொய், மருது மன்னர்கள் கோடிக் கணக்கான பணத்தைக் காட்டில் உள்ள பாலை மரப் பொந்துகளில் ஒளித்து வைத்துள்ளார்கள்; அதை அவ்வாறு அவர்கள் மறைத்து வைக்க, மரத்தில் துளை போட்டுத் தந்தவர்களை எல்லாம் மறைப்பு வெளியாகாதிருக்கக் கொலை செய்துவிட்டார்கள்; இப்போது யார் அம்மரங்களைக் குத்தகை எடுக்கின்றார்களோ, அவர்களுக்கு ஆகூழ்!” என்பதாகும். இதைக் கேட்டவர்கள் நாக்கில் நீர் ஊறியது. கம்பெனியாரது அதிகாரம் பெற்றிருந்த பொம்மை ராஜா உடையணத்தேவனிடம் போய்க் காடுகளைக் கவுல் கேட்பதில் பலத்த போட்டி ஏற்பட்டது. காடுகளில் பெரும் பகுதி கவுல் விடப்பட்டது. கவுல் எடுத்த மக்கள் அவ்வளவு காடுகளையும் அழித்துத் தொலைத்தார்கள். அதனால், விடுதலை வீரர்கள் இயற்கையின் அரவணைப்பில் ஆறுதலோடு தங்கும் நிலையும் இல்லாது போயிற்று. இதை அறிந்து மகிழ்ச்சி கொண்டிருந்த கம்பெனியார், தம் பட்டாளத்துடன் மங்கலம் என்ற கிராமத்தில் முகாம் அடித்திருந்தனர். அவ்வாறு தண்டு இறங்கி இருந்த வெள்ளையரிடம் போய்ப் பல ஊர்களின் 'பெருங்குடி மக்கள் சலாம் செய்து, மாலை மரியாதைகளுடன் அவர்களை வரவேற்று, பல கிராமங்களைத் தங்கட்குக் கவுல் விடும்படி கேட்டுக் கொண்டார்கள். அதோடு அவர்களைத் திருத்திப்படுத்த வேண்டும் என்ற வீணாசையால், மன்னிக்க முடியாத ஒரு குற்றத்தையும் செய்யத் துணிந்து, மருது மன்னர்களும் ஊமைத்துரையும் மறைந்திருந்து மீண்டும் தமிழகத்தின் வீரப்போருக்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் சங்கரப்பதிக் காட்டையும் கோட்டையையும் காட்டிக் கொடுத்துவிட்டார்கள் உண்மை அறிந்த கம்பெனியாரது உள்ளம் பூரித்தது. அவர்கள் நள்ளிரவில் கொள்ளையடிக்கும் கள்ளர் போலத் துப்பாக்கி பீரங்கிகளோடு சென்று, விடுதலை வீரர்கள் தங்கியிருந்த கோட்டையையும் காட்டையும் வளைத்துக் கொண்டு, குண்டு மாரி பொழிந்தார்கள். அயர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வீரர் பலரும் குண்டு பாய்ந்து பிணமாயினர். விழித்தெழுந்த வீரர் சிலரும் மருது மன்னர்களும் ஊமைத்துரையும் தன்னந்தனியராக வீரப்போர் புரிந்து தப்பினர். ஆனால், கம்பெனித்தளகர்த்தனா விடுவான் அவன் சங்கரப்பதிக் காடுகளைச்சுற்றிலும் பட்டாளத்தைப் பரப்பிவிட்டான். முப்பெருவீரர்களின் விலைமதிக்க முடியாத தலைகட்கும் விலை வைத்தான் வெளிநாட்டு வெள்ளையன். அந்தத் தலைகட்கு வைத்த விலையை - ரூபாய் நாலாயிரத்தைப் பெற வேண்டும் என்ற பேராசையால் கம்பெனிப் பட்டாளத்திலிருந்த சிப்பாய்கட்கு இடையே பலத்த ஊக்கமும் போட்டியும் ஏற்பட்டன. எந்த வெள்ளையன் - கர்னல் வெல்ஷ் - மருது சகோதரர்களிடம் வாள், கதை, வளரித்தடி முதலியவற்றைப் பயன்படுத்தும் கலையைக்