பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 பேராசிரியர் ந.சஞ்சீவி நாடாய் விளங்கியது. பாண்டிப் பேரரசின் ஆட்சிக்கு அஃது ஆரம்பகாலங்களில் உட்பட்டே இருந்தபோதிலும், பின்னாளில் தனிச்சீமையாக அதைப் புகழ் மிக்க சேதுபதி என்பார் ஆண்டு வந்தனர். சேதுபதிகள் ஆண்ட அப்பகுதியைச் சேதுநாடு என்று அறிஞர் கூறுவர். சேதுபதிகள் யார்? அவர்கட்கு அப்பெயர் அமைய காரணம் யாது? அவர்கள் வரலாறு என்ன?’ என்பன குறித்து இங்கு நாம் சிந்திப்பது பொருத்தமும் பயனும் உடையதாகும். சேது நாட்டின் பழமை இராமாவதாரத்தோடு தொடர்பு கொண்டு தொடங்குகிறது. 'இராமபிரானார், தம் பெரும்படைகளுடன் இலங்கை செல்ல வேண்டி வானரத் தலைவர்களைக் கொண்டு கட்டுவித்த திருவணையே சேது' எனப்படும். இந்தச் சேதுவைக் காவல்புரிதற்கு அப்பிரானாரால் நியமிக்கப்பெற்ற மறவர் தலைவன் வழி வந்தவரே சேதுபதிகள் என்பது அவர்களின் பழைய வரலாறு. இது பற்றியே திருவணை காவலன், சேது மூல ரக்ஷாதுரந்தரன் என்ற சிறப்புப் பெயர்களும் இவர்கட்கு வழங்கலாயின. இவ்வரலாற்றின் உண்மை எப்படியாயினும், இவர் பழமையான மரபினர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இன்றைக்கு முந்நூறு ஆண்டுகட்குமுன் பாண்டி மண்டலத்தை மதுரையிலிருந்து ஆட்சி புரிந்த முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் கால முதலே சேதுபதி என்ற சிறப்புப் பெயர் இவ்வரசர்க்கு வழங்கி வருகிறது. இது, சாஸ்ன மூலமாகவும் வரலாற்று நூல்கள் வாயிலாகவும் தெளியப்பட்டதாகும். "சேதுவேந்தர் ஆண்டுவந்த நாடு, இப்போதுள்ள இராமநாதபுரம் சிவகங்கைச் சீமைகளும், புதுக்கோட்டை தஞ்சைப் பகுதிகளுமாய் முன்பு விரிந்திருந்தது. முகவை என இலக்கிய வழக்குப் பெறும் இராமநாதபுரம், இவர்கள் தலை நகரம். தெய்வ பத்தியிலும் செங்கோலாட்சியிலும் சிறந்திருந்தனர் இவ்வரசர். சேது நாட்டில் புதுமையும் பழமையுமான தேவாலயங்கள் பல இவர்களால் ஆக்கப்பட்டும் காக்கப்பட்டும் வந்தன. அவற்றின் பொருட்டு இன்னோர் உதவிய நிதிகளும் நிலங்களும் எண்ணிறந்தவை. இத்தலங்களுள் தலை சிறந்தது தேவை எனப்படும் இராமேச்சுரமாகும். தனுஷ் கோடி என்று உலகப் பிரசித்திபெற்ற புண்ணிய தீர்த்தத்துறையும் இச்சேதுநாட்டைச் சார்ந்ததே. இத்தலத்தையும் புண்ணியத் துறையையும் தரிசிக்க வேண்டிச் சேது யாத்திரையாக வரும் இப்பரத கண்டத்துப் பலதேசமக்களுக்கும் வழிப்பயம் சிறிதும் இல்லாமற் செய்தும், வேண்டிய இடங்களில் உண்டி உறையுள் முதலியன உதவியும் பாதுகாத்து வந்தார்கள் சேதுபதிகள். இவற்றிற்காக நாடெங்கும் இவர்கள் அமைத்துள்ள அறச்சாலைகள் மிகப்பல. மற்றும் இன்னோர் அமைத்த தரும நிலையங்களும் வீரம் முதலிய அருஞ்செயல்களும் நாடெல்லாம் நன்கறிந்தவை'