பக்கம்:மானிட உடல்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மானிட உடல் இசைப்பையின் உட்புறச் சுவர்களின் சில பகுதிகள சிதைந்து விடவும் கூடும். நாம் எதிர் பார்ப்பதைப் போலவே, சுரப்பு நீர்கள் ஒரு நிலையான அளவுகளில் சொரிந்துகொண் டிருப்பதில்லை ; நாம் உண்ணும் உணவைப் பொருத்து அது அளவில் மாறுபடு கின்றது. உணவு கொண்ட இரண்டு அல்லது மூன்று மணி கால அளவிற்குப் பிறகு, அமிலத்தின் வேகத்தைக் கணிப்ப தற்குக் குறைந்த அளவுதான் சளிச் சவ்வில் நீர் சுரக்கிறது என்று கருத வேண்டியுள்ளது. திடகாத்திரமான இரைப் பையில் இம் மாதிரியாக அதிகப்படியான அமிலத்தன்மை உண்டாகாது. இரைப்பையின் சளிச் சவ்வில் அழற்சி கொண்டவருக்கு அல்லது வயிற்றுப் புண்ணுல் பாதிக்கப் பட்டவருக்கு இாைப்பையில் வலியேற்படும் ; அல்லது எரிச்சல் போன்ற உணர்ச்சி உண்டாகும். இந்த வலி அல்லது எரிச்சல் சிறிதளவு பாலை உட்கொண்டால் நீங்கி விடும். பால், அமிலக்கை நடுநிலையாக்கிவிடுகின்றது. ஹைட்ரோகுளோரிக் அமிலம் அழற்சியை உண்டாக்கக் கூடிய பொருள் என்றும் அந்த அழற்சியைத் தணிக்க வேண்டும் என்றும் மட்டிலும் கருதுகல் தவறு. அந்த அமி லத்தால் பல நன்மைகளும் ஏற்படுகின்றன ; அந்த அமிலம் சுரத்தல் உடலின் அமில-உப்புமூல சமநிலையுடன் உறவு கொண்டுள்ளது; ஆகவே, அது சிறுநீரகங்கள் அமிலத்தன்மை யுள்ள சிறுநீரை அகற்றுவதுடனும், நுரையீசல் காத் தன்மையுள்ள வாயுவை வெளிப்படுத்துவதனுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இரைப்பை அல்லது குடல் தொந்தாவில்ை ஏற்படக் கூடிய வாந்தி கால காமதப்படுமா குல், அகட்டு நீரிலுள்ள அமில இழப்பு குருதியின் அதிகப் படியான காசதாத்தில் பிரதிபலிக்கின்றது. அகட்டு நீரின் அமிலத்தன்மைதான் இாைப்பையி லுள்ள பாக்டீரியாக்கள் சிதைவதற்குக் காரணமாகின்றது. எனவே, குடல்களினுள் புகும் உணவுப் பொருள்கள் தூய்மை யான நிலையிலுள்ளன. ஹைட்ரோகுளோரிக் அமிலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/106&oldid=865815" இலிருந்து மீள்விக்கப்பட்டது