பக்கம்:மானிட உடல்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மானிட உடல் விக்கத்திற்கேற்ப மாறுபடும். இவ்வாறு நடைபெறும் சுருக் கத்தில் அலைகள் கின்றுபோகக் கூடுமானல், எங்கோ உண்மை யான தடையொன்று ஏற்பட்டு அதன் காரணமாக சிறு குடலிலுள்ள பொருள் தேங்குவதால் ஏற்படுவது போன்ற துன்பத்தை நாம் அடைவோம். சிறுகுடலின் முதற் பகுதியாகிய முன் சிறுகுடல் பெரும் பாலும் வபைக்குப் பின்புறமாக அமைந்திருக்கின்றது. அது இாைப்பையிலுள்ள குடல்வாயின் கோடியிலிருந்து கீழ்ப்புற மாக வளைந்து சென்று, பிறகு இடது புறமாக மீண்டும் குறுக்கே சென்று, வயிற்றின் நடுக்கோட்டிற்கு மேலே கிற் கின்றது. அதன் முதற் பகுதி அமில அகட்டுப்பாகைப் பெறு கின்றது : இசைப்பையில் ஏற்படும் புண்களைப் போலவே இப் பகுதியிலும் புண்கள் உண்டாகக் கூடும். அது கீழ்நோக்கி வரும் பகுதியில் கல்லீரலிலிருந்து வரும் பித்த நீரும் கன யங்களிலிருந்து வரும் கணையச்சாறும் நுழைகின்றன; பெரும் பாலும் அவை ஒரு பொது வாயில் வழியாகவே தழை கின்றன. இரண்டு திரவங்களும் காரத்தன்மையுட னிருப்ப தால், அமிலத்தன்மை நடுநிலையாக்கப் பெறுகின்றது. இதன் விளைவாக சிறுகுடல் சுவரிலிருந்து சுசக்கும் செரிமானத் தில் செயற்படும் துரைப் புளியங்களும், காசக்தன்மையுள்ள இடைநிலைப் பொருளே நாடும் கணையமும் சுறுசுறுப்புத் தன்மையுடன் இயங்கக் கூடும். முன் சிறுகுடலில்தான் செரிமானம் மிகச் சுறுசுறுப் பாக நடைபெறுகின்றது; குருதியிலும் நிணநீரிலும் உறிஞ்சப் பெறக் கூடிய இறுதி நிலை விளைபொருள்கள் தயாராகின்றன. செரிமானத்திற்குரிய சாறுகளில் பெரும் பகுதி கணேயங்களி லிருந்து கிடைக்கின்றன (படம் - 31). இந்நிலையில் கணையம் உமிழ்நீர்ச் சுரப்பியைப் போன்றதொரு செயலையே மேற் கொண்டிருக்கின்றது. புயவளேவினுள் குழவி இருப்பது போலவே, முன் சிறுகுடலும் இசைப்பையும் சேர்ந்து உண்டாக்கும் வளைவினுள் கணையம் அமைந்துள்ளது. கணேயத்தின் தலைப் பகுதி அல்லது வலது கோடி முன் சிறுகுடலின் அருகிலுள்ளது ; இந்த இடத்தில்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/112&oldid=865826" இலிருந்து மீள்விக்கப்பட்டது