பக்கம்:மானிட உடல்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 மானிட உடல் னின்றெடுத்த சாசமோ குருதிச் சோகையுள்ளவர்களுக்கும் நல்லூட்டம் பெருதவர்களுக்கும் சிறந்த உணவாக அமை வதில் வியப்பொன்றும் இல்லை. கல்லீரலின் இன்னுெரு சிறப்பான செயல் பித்த நீரை உற்பத்தி செய்து வெளிப்படுத்துவதாகும். இகல்ை பல கழிவுப் பொருள்கள் ஒரு தாம்பின் மூலமாகச் சிறுகுடலினுள் வெளியேற வசதியேற்படுகின்றது. அதே சமயத்தில் செரி மானத்திற்கும் உறிஞ்சப்படுதலுக்கும் தேவையான பொருள் களேச் சிறுகுடலிலுள்ள பொருள்கள் பெறுவதற்கு வசதி யாகின்றது. கல்லீரலின் வழியாகப் பித்தநீரை வெளிப்படுத்தும் மண் டலம் கல்லீரலின் குருதிக் குழல்களின் சாயலையே ஒத்திருக் கின்றது ; ஆனல், அது நேர் எதிர்த் திசையில் பித்தநீரை வடிக்கின்றது. கல்லீரலின் சிறு ஈரலிதழிலுள்ள மிகச் சிறிய அளவிலுள்ள பித்தநீர் தரும் பகுதி இரண்டு கல்லீரல் நாண்களேத் தன் சுவர்களாகப் பெற்றுள்ளது. அதனுல் கல் வீசலின் உயிரணு ஒரு பக்கம் ஊட்டந்தாவல்ல குருதி நுண் புழையுடனும் பிறிதொரு பக்கம் கழிவுத் தாரையாகிய பிக்க நீர் நண்புழையுடனும் நெருங்கி அமைந்திருக்கின்றது. சிறு ஈசவிதழின் சுற்றுப்புறத்தில் பித்த நீரின் சிறு தும்புகள் பெரிய தாம்பாக ஒன்றுசேர்கின்றன ; இந்தப் பெரிய தும்பு கல்லீரல் பள்ளத்தை நோக்கி எதிர்த்துச் செல்லுகின்றது. இங்கு இரண்டு பிரதம பித்தநீர்க் தாம்புகள் கல்விால் நாளக் தின் நீளவசத்தில் வெளிக் கிளம்புகின்றன. பித்தநீர் பித்தநீர் ஒரு தனிப்பொருள் அன்று ; அது கல்லீரலில் ஒரு பகுதியும் பிற உறுப்புக்களின் உயிரணுக்களால் ஒரு பகுதியுமாக உண்டான பொருள்களின் சிக்கலான ஒரு கலவையின் கிரட்டாகும். கிட்டத்தட்ட பித்தநீரின் 97 சத விகிதம் ரோகும். எஞ்சிய பகுதியில் பித்தநீர் நிறமிகள், கரிமமில்லா உப்புக்கள், பித்தநீர் உப்புக்கள், நீரில் கசையாத

  • Excretory canal. +Periphery. i Hilum.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/126&oldid=865858" இலிருந்து மீள்விக்கப்பட்டது