பக்கம்:மானிட உடல்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுநீர் மண்டலம் 1 | 1 வடிகட்டும் செயல் நடைபெறுகின்றது. அதிர்ச்சி ஏற்படுங் கால் இருப்பதுபோல் துண்புழையிலுள்ள குருதியின் அமுக்கம் குறைவாக இருந்தால், சவ்வினூடே பாய்மம் கடந்து செல்லாது. அல்லது, சிறுநீர்ப் பாதை அடைபட்டு அதன் காரணமாக அமுக்கம் அதிகமானல், அவ்வடைப்பு நீக்கப்படும்வரை, வடிகட்டும் செயல் கின்று போகும் ஒரு நிலையும் ஏற்படுகின்றது. இன்னும் தலைச்சுரப்பி, புரிசைச் சுரப்பி, மாங்காய்ச் சுரப்பிபோன்ற சுரப்பிகளாலும் காபி, ஆல்கஹால் போன்ற பானங்களாலும் வடிகட்டப்பெறு கின்ற பாய்மத்தின் அளவு பாதிக்கப் பெறுகின்றது. சிறுநீரகத்தின் வழியாக நடைபெறும் குருதியோட்டக்கி லுள்ள எந்த மாற்றமும் சிறுநீரக முடிச்சுச் சவ்வினூடே செல்லும் பாய்மத்தின் அளவில் பிரதிபலிக்கும். சிறுநீரக முடிச்சின் இடத்தினுள் வடிகட்டப்பெறற பாய்மம் கொளேயாகவுள்ள சிறு குழலினுள் இயல்பாகவே வடிந்து செல்கின்றது. இந்தச் சிறு குழலினுள் மிகச் சிகக லான பொருத்தப்பாடுகள் நடைபெறுகின்றன ; முக்கிய பகுதிப் பொருள்கள் காலியாகாமல் சில பொருள்கள் அகற் றப்பெறுகின்றன. சிறு குழலின் அணேச்சவ்விலுள்ள உயி சனுக்கள், பல பகுதியிலுள்ள தம்முடைய பல்வேறு செயல் களினல், வடிகட்டப்பெறும் நீர்க்குருதியைச் சிறுரோகமாற்று கின்றன. பாய்மத்தின் பெரும் பகுதி சிறு குழலினல் குருதியி லுள் திரும்பவும் அனுப்பப்பெறுவது மிகவும் முக்கிய மாகும் ; இல்லாவிடில் நாம் விரைவில் நீரின்றிப் போய்விடு வோம். கிட்டத்தட்ட ஐந்தில் நான்கு பாகம் நீர் உடலின் தேவைக்குரிய நீரின் அளவு குறையாமையைப் பொருட்படுத் தாது முதலாவதாகச் சுருண்டு கிடக்கும் சிறு குழலின் பகுதி பால் திரும்பவும் உடலினுள் உறிஞ்சப்பெறுகின்றது. ஆனல், இரண்டாவதாக அல்லது தாசத்தில் சுருண்டு கிடக்கும் சிறு குழலில், குருதி வட்டத்திற்குக் கிரும்ப அனுப்பப்பெறும் பாய்மத்தின் அளவு உடலிலிருந்து 虏序 வெளிப்போகும் நிலைக்கேற்றவாறு மாறுபடுகின்றது. உடலிலிருந்து நீர் வெளிப்போவது தலைச்சுரப்பியிலுள்ள ஒரு ஹார்மோனின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/135&oldid=865878" இலிருந்து மீள்விக்கப்பட்டது