பக்கம்:மானிட உடல்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 24 மானிட உடல் வளர்சிதை மாற்ற வேகமும் பெரிய அளவில் அதிகரிக்கின் றது. புரிசைச் சுரப்பியின் ஹார்மோன் குறைவினுல் வளர் சிதை மாற்ற வேகமும் குறைந்த அளவாகப் போய்விடுகின் றது. அடிப்படை வளர்சிதை மாற்ற வேகத்தை அளத்து காணலே புரிசைச்சுரப்பியின் சிலவகை நோய்களைத் தீர்மானிப் பதற்கு முக்கியமான முறையறி ஆய்வாகும்.இன்சுலின், பழச் சருக்கரை, பயன்படுவதை விரைவாக அதிகரிக்கின்றது. காரணம் இன்சுலின் இல்லாவிடில் பழச் சருக்கரை சரியான முறையில் பயன்படாது; அதன் அதிகமான இருப்பு சிறுநீரில் அகற்றப்பெற்றுவிடும். மாங்காய்ச் சுரப்பியின் மேற்பகுதியி லுள்ள ஹார்மோன்கள் பழச் சருக்கரை பயன்படுவதன் துரிதத்தைக் குறைக்கின்றன ; ஆல்ை, இந்த ஹார்மோன் களின் செய்கை எதிரானதுபோல் காணப்படுகின்றது. உண் மையில் இன்சுலினும் மாங்காய்ச் சுரப்பியின் மேற்பகுதியி லுள்ள ஹார்மோன்களும் ஒன்று சேர்ந்து செயற்பட்டு உடலுக்கு நேர்த்தியான, உணர்வுள்ள ஆற்றல் உற்பத்தியின் கட்டுப்பாட்டை அளிக்கின்றன. பிசித வளர்சிதை மாற்றம் கார்போ ஹைட்டிரேட் பொருள்களில் கரியும் நீரும் உள்ளன என்பது அவற்றின் பெயரிலிருந்தே அறிந்து கொள்ளலாம். எனினும், பிகிதங்கள் தம்முடைய அமைப்பில் நைட்டிாஜெனேக் கொண்டிருப்பதால் சிறப்புத் தன்மையைப் பெறுகின்றன. பிசிதங்களில் மிகச்சிக்கலான அணுக்திாஃாகள் உள்ளன ; அவற்றில் பல அமிலங்கள் மிகவும் திட்டமான முறையில் இணைக்கப்பெற்றுள்ளன. அதிலுள்ள அமினே அமிலந்தான் நைட்டிஜென் அணுவைப் பெற்றுள்ளது. ஒரு சில அமினுே அமிலங்களில்கூட கந்தக அனுக்கள் உள்ளன உதர-சிறுகுடல் பாதையினுள்தான் இறைச்சி, பாலா டைக் கட்டி போன்ற பிசித உணவுகள் அமினே அமிலங்க

  • கார்ப்ோ என்பது கரியைக் குறிக்கும் , ஹைட்ரோ என் பது நீரைக் குறிக்கும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/148&oldid=865906" இலிருந்து மீள்விக்கப்பட்டது