பக்கம்:மானிட உடல்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 26 மானிட உடல் பொருள் நம் உடலில் என்ன செய்கின்றன என்பதனை எளி காக அறிய முடிகின்றது. சில ஹார்மோன்கள் பி.சிதத் தொகுப்பில் ஆழ்ந்த செல் வாக்கினைச் செலுத்துகின்றன என்பதையும் நாம் அறிகின் ருேம். வளர்ச்சியை விளைவிக்கும் அடித்தலை முன்சுரப்பியின் ஹார்மோன் பி.சிதத்தின் வெளித் தொகுப்பினே அதிகரிக் கின்றது. டெஸ்டோஸ்டெசோன் என்ற ஆண்பால் ஹார் மோன் தசைப் பிகிதத்தை அதிக வேகமாக உண்டாக்குகின் றது. புரிசைச் சுரப்பியின் ஹார்மோன் ஒரளவு பிசிதக் தொகுப்பினை அதிகரிக்கச் செய்கின்றது. பிசிதங்கள் உண்டாதல்பற்றிய தகவலைவிட அவை சிதைதல் பற்றிய திட்டமான தகவல்கள் நமக்குக் கிடைக் ன்றன. தசைப் பிசிதம் திட்டமான முடிவுப் பொருள்க ளாகச் சிதைகின்றன ; இப் பொருள்களே குருதியிலும் சிறு நீரிலும் இனங்கண்டு கொள்ளலாம். ஒவ்வொரு பாலூட்டி யின் உயிரணுவிலுமுள்ள உள்ளனுக்கள் என வழங் கும் பிரத்தியேகமான பிசிதச் சிக்கற் பொருள்களிலிருந்து இனங்காணக் கூடிய வளர்சிதை மாற்றச் சிதைபொருள்கள் தோன்றுகின்றன. கல்லீரலிலுள்ள நுரைப்புளியங்கள் சில அமினே அமிலங்களை உடைத்துப் பங்கப்படுத்தி சிறுநீர் உப்பாக மாற்றுகின்றன ; இவ்வுப்பு உடனே சிறுநீருடன் வெளியேற்றப் பெறுகின்றது. பிசித வளர்சிதை மாற்றம் என்பது ஒர் இயக்க வகைக் கிரியையாகும். தொகுப்பும் சிதைவும் ஒருங்கே நடைபெறுகின்றன. வளரும் உடலில் சிதைதலை ஆக்குதல் விஞ்சி நிற்கின்றது. வளர்ந்தவர் உடலில் அக்கிரியைகள் சமநிலையில் உள்ளன. அது மிகவும் நுட்ப மான ஒரு சமநிலை என்றே சொல்ல வேண்டும்; ஏனெனில், அது எளிதில் எப்பக்கமும் சரியக் கூடும். ஒரு காயக்கி லிருந்தோ சக்தி சிகிச்சையிலிருந்தோ தெளியுங்கால் நிலுவை உடன்பாட்டில் இருத்தல் வேண்டும். நாட்பட்ட நோய் பி.சிதத் சிதைதலை அதிகரிக்கக் செய்கின்றது. பிசித வளர் சிதை மாற்றம் ஒரு தனியான செயல்போல் ஆராய்வதற்குச்

  • Protein synthesis.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/150&oldid=865911" இலிருந்து மீள்விக்கப்பட்டது