பக்கம்:மானிட உடல்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர் சிதை மாற்றம் 131 மின்னுற்பகு திரவங்களும் நீரும் இரைப்பை குடல்வழி யில் உறிஞ்சப்பெற்றுக் குருதியில் காணப் பெறுகின்றன. அதன் பிறகு சிறிது நேரத்தில் சிறிதளவு நீரும் உப்புக்களும் இழையப் பாய்மத்தில் காணப் பெறுகின்றன. உயிரணுவிற்குப் புறத்தேயுள்ள பாய்மத்தில் ஒரு திட்டமான அளவு நீரும் உப்புக்களும் இருப்பதற்காகவே உடல் இப் பொருள்களேக் குருதியில் இருப்பாக வைக்கிருக்கின்றது. அதிகமாக உள்ளவை சிறுநீரகங்களின் மூலம் வெளியேற்றப் பெறு கின்றன ; அது எவ்வாறு நிகழ்கிறது என்பது இன்னும் திட்டமாகத் தெரியவில்லை. மாங்காய்ச் சுரப்பிகளின் மேற் பகுதியிலுள்ள ஹார்மோன்களும் அடித்தலைச் சுரப்பியி லுள்ள ஹார்மோன்களும் சிறுநீரகங்கள் உப்புக்களையும் ைேசயும் கட்டுப்படுத்தி துவதில் முக்கிய பங்கு கொள்ளு கின்றன என்று அறியப் பெற்றுள்ளது. உயிரணுவிற்குப் புறத்தேயுள்ள பாய்மம் மாரு திருப்பது உயிரணுவிற்கு உள்ளேயிருக்கும் பொருள்களே நிலைத்திருக்குமாறு செய் கின்றது. உயிரணுவிற்குப் புறத்தேயுள்ள இந்தப் பாய்மத்தினுள் தான் உயிரணுவின் வளர்சிதை மாற்றக் கழிவுப் பொருள்கள் வெளியேற்றப் பெறுகின்றன. கரியமிலவாயு போன்ற இக் கழிவுப் பொருள்கள் அமிலத்தன்மையுடையவை. கரிமிலவாயு குருதியால் துரையீரலுக்குக் கொண்டுபோகப் பெற்று வெளி யேற்றப்படுகின்றது. வாயுவல்லாத அமிலக் கன்மை புள்ள பொருள்கள் குருதியில் காணப்பெறும் பைகார்பனேட், காரத்தன்மையுள்ள பிற பொருள்கள் ஆகியவற்ருல் நடுநிலை பாக்கப் பெறுகின்றன. சிறுநீரகங்கள் பிற அமிலக் கழிவுகளே அகற்றுவதுடன் குருதியின் பைகார்பனேட்டையும் நிறைவிக் கின்றன. உடல் திறனுடன் செயற்பட வேண்டுமானுல் அமில, காசக்தன்மையுள்ள பொருள்களின் அடர்வு (pH அளவு) சிறிதும் மாரு திருக்க வேண்டும் ; உயிரணுவிற் குப் புறத்தேயுள்ள பாய்மம் மிகச் சிறிய அளவில் அமிலக் தன்மையை பெற்ருலும் சரி, காரத்தன்மையை அடைக் தாலும் சரி, இறப்பு நேரிடக் கூடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/155&oldid=865921" இலிருந்து மீள்விக்கப்பட்டது