பக்கம்:மானிட உடல்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 மானிட உடல் விளைவித்தது. இறுதியாக அடித்தலைப் பின் சுரப்பியின் சாாம் தூய்மையாக்கப் பெற்று அகிலிருந்து பல்வேறு இயை புப் பொருள்கள் பிரித்தெடுக்கப் பெற்றன. இரண்டு கூட்டுப் பொருள்கள் பிரிக்கப்பெற்றன. அவை பிட்ரெஸின், பிட்டோ சின் என்பவை. பிட்செஸினை டயாபெட்டிஸ் இன்சிபிடெ ஸால் பீடிக்கப் பெற்றவர்களுக்குக் கொடுத்ததில் பாகப் படாத அடித்தலைச் சுரப்பியின் சாசத்தைவிட வீரியம் மிக்க காகக் காணப்பட்டது. பிட்டோசினிடம் பிட்ரோஸினின் குணங்களில் ஒன்றுகூட இல்லை. அதற்குப் பதிலாக அது கருப்பமுற்றிருக்கும் பெண்ணுக்கும் பிராணிக்கும் பிரசவ வேதனையைத் தொடக்கியது. அடித்தலைச் சுரப்பியில் ஆற்றல் வாய்ந்த இந்தப் பொருள் இருந்தபோதிலும், அது பெண்ணுக் குப் பிரசவ வேதனையைக் தருவதில் பங்கு கொள்ளுகிறது என்பதற்கு யாதொரு காரணமும் தெரியவில்லை. எனினும், அப்பொருள் பிரசவ வைத்தியர்களால் பிரசவ வேதனையைத் தாண்டுவதற்கு அல்லது சிலரிட்ம் அதிகத் திறனுடன் செயற் படுவதற்கு அது மிகப் பாதுகாப்புடன் தரப்பெறுகின்றது. அடித்தலைச் சுரப்பியில் வேறு ஹார்மோன்கள் உள்ள னவா ? எண்டோகிரீன் ஆராய்ச்சியாளர்களிடம் இது தர்க் கத்திற்கிடமான விஷயமாக இருக்கிறது. ஒருகால் அடித்தலை முன் சுரப்பியினின்றும் எல்லா ஹார்மோன்களையும் பிரிக் தெடுக்கப் பெருதிருக்கலாம். அண்மையில் பல ஸ்காண்டி நேவிய ரண வைத்தியர்கள் சில புற்றுநோயாளர்களிடம் அடித்தலை முன் சுரப்பியை நீக்கினர் ; ஆனல், அவர்களது முறையின் முடிவுகளே ஆராய்வதற்கேற்ற பக்குவம் இன்னும் ஏற்படவில்லை. மாங்காய்ச் சுரப்பிகள் எல்லா எண்டோகிரீன் சுரப்பிகளைவிட மாங்காய்ச் சுரப்பிகள்தாம் உயிர்வாழ்வதற்கு மிகவும் இன்றியமையா தவை. ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேற்கோடியிலும் வயிற்றி லுள்ள பெரிய குருதிக் குழல்களுக்கிரு புறமும் ஒரு சுரப்பி யாக ஒட்டிக்கொண் டிருக்கின்றது. (படம் 41.) அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/164&oldid=865939" இலிருந்து மீள்விக்கப்பட்டது