பக்கம்:மானிட உடல்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்டோகிரீன் மண்டலம் 147 அறிவியலறிஞர்கள் இன்சுலினைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டனர். இன்சுலின் நம்முடைய உடலிலுள்ள சருக்கரையின் உபயோகத்தைக் கட்டுப்படுத்தும் முக்கிய அம்சங்களில் ஒன்று. இன்சுலின் இல்லாமல் மானிட உயிரின் உயிசனுக் கள் ஆற்றலை உண்டாக்குவதற்குச் சருக்கரையை யாதொரு திறனுடனும் பயன்படுத்த இயலா. ஆகவே, உணவிலுள்ள சருக்கரை குருதியோட்டத்தில் ஒன்று சேர்ந்து சிறுநீருடன் வெளியேற்றப்படுகின்றது. இதுதான் நீரிழிவு நோயாளியின் நிலை. இதற்கு நேர்மாருக, குத்திப் புகுத்துவதனலோ அன்றி தீவு-உயிரணுவில் ஏற்படும் கட்டியினலோ விரைவாக உற் பத்தியாகும் அதிகமான இன்சுலின் குருதிவிலுள்ள சருக் கசையைக் குறைக்கின்றது. குருதியின் சருக்கரை அளவு மிகத் தாழ்ந்த நிலைக்குக் குறைக்கப்பெற்ருல், ஒருவித ”துக்க நோய் உண்டாகிறது. இந்தத் தாக்கநோய் இன்சுலின் அதிர்ச்சி என்று வழங்கப்பெறுகின்றது. இன்சுலின் சுரத்தல் எவ்வாறு கட்டுப்படுத்தப் பெறு கின்றது என்பது இன்னும் தெளிவாகப் புலகைவில்லை. அடித்தலை முன்சுரப்பி தீவு-உயிரணுக்களேத் தாண்டக்கூடிய ஒரு ட்ரோபிக் ஹார்மோனேச் சுரக்கவில்லை. இந்த உயிரணுக் களே நாம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது என்பதற்கும் யாதொரு ஆதாரமும் இல்லை. குருதியிலுள்ள சருக்கரையின் அளவு இன்சுலின் உற்பத்தி அளவைக் கட்டுப்படுத்தக் கூடும் என்பதை அண்மையிலுள்ள ஒர் ஆதாரம் உணர்த்து கிறது. குருதிச் சருக்கரை அதிகமாக இருக்கும்பொழுது இன்சுலின் அதிக அளவுகளில் சுரக்கின்றது. அது குறை வாக இருக்கும்பொழுது இன்சுலின் உற்பக்கியும் குறைந்து விடுகிறது. இன்சுலின் எவ்வாறு தன் பலன்களே விளைவிக்கின்றது என்பது ஒரளவு நன்கு புலனுகியுள்ளது. சருக்காையைப் பயன்படுத்தி ஆற்றலை விளைவிக்கும் பல்வேறு நுரைப்புளியங்

  • coma.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/171&oldid=865954" இலிருந்து மீள்விக்கப்பட்டது