பக்கம்:மானிட உடல்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 மானிட உடல் களின்மீது அது அளவற்ற செல்வாக்கினைப் பெற்றுள்ளது. இன்சுலின் இல்லாதபொழுது இந்த நுரைப்புளியங்கள் கிற லுடன் செயற்படுவதில்லை. ஒன்றுவிட்டு ஒன்ருகவுள்ள ஆற்றல் மூலங்களுடன் கூடிய உயிரணுக்களே உண்டாக்கிக் கொள்வதில் உடல் உடனே முனைகின்றது. கொழுப்புப் பொருள்களும் பிசிகங்களும் அதிக வேகத்தில் சிதைக்கப் பெறுகின்றன. கொழுப்புப் பொருள் சிதைவினுல் குருதி யோட்டம் அமிலங்களைப் பெறுகின்றன. தேவையான அமி லங்கள் குருதியோட்டக்கில் சொரியப் பெற்றவுடன் குருதி யின் pH அளவு தாழ்கின்றது. இந்நிலை அளவிடோஸிஸ்: என்ற வழங்கப் பெறுகின்றது. குருதியின் pH அளவு. தாழ்தல் என்பது ஒரு பெரிய மாற்றமாகும் , அது உடலி லுள்ள எல்லா உயிரணுக்களின் கிறனையும் பாதிக்கின்றது. அஸிடோஸிஸ் கிலேயை நீக்காவிடின் இறப்புதான் முடிவு. இன்சுவினையும் காத்தன்மையுள்ள ப்ொருள்களையும் குருதி யினுள் புகுக்தி அஸிடோஸிஸ் நோயாளியிடம் வியத்தகு முன்னேற்றத்தைக் காணலாம். இன்சுலின் குறைவு நீரிழிவு நோயின் எல்லா அறிகுறி களையும் சரியான முறையில் விளக்கவில்லை. கண்கள், சிறு நீரகங்கள், நாம்பு மண்டலம், சுற்றியோடும் குழல் மண்டலம் ஆகிய பல்வேறு உறுப்புக்களும் இந் நோயினுல் ஊறுபடு கின்றன. இன்சுலின் புகுத்துவதனுல் இவ்வுறுப்புக்கள் சீர் கேடடைதலினின்றும் பாதுகாக்கப் பெறுவதில்லை. பிராணி களிடம் சோதனையின் பொருட்டும் மனிதர்களிடம் புற்று நோயின் காரணமாகவும் கணையத்தை நீக்கியதனுல் நடை முறையில் கடுமையான நீரிழிவு நோயினே விளைவிப்பதில்லை. இவ்வாறு தாண்டப்பெறும் நீரிழிவு நோய் ஒரளவு சாங்க மாகவே உள்ளது. நீரிழிவு நோயாளிகள் கணேயப் புற்று நோயினுல் தொல்லைப்படுங்கால், அந்தக் கணையத்தை நீக்கி அதல்ை நீரிழிவு குணமாகிய நபர்களேயும் நாம் காண்கின் ருேம் ! நீரிழிவு என்பது ஒரு நோய் அன்று ; அகன் காரணமும் சிகிச்சையும் நன்முக அறியப்பெற்றுள்ளன. 米 Diabetes o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/172&oldid=865956" இலிருந்து மீள்விக்கப்பட்டது