பக்கம்:மானிட உடல்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்டோகிரீன் மண்டலம் 151 அத்தியாயத்தில் விவசமாக விளக்கப்பெற்றிருக்கின்றது." எனினும், இங்கு எஸ்ட்ரோஜென், புராஜெஸ்ட்ரோன் என்ற ஸ்டெராய்டு ஹார்மோன்களைப்பற்றிச் சிறிது கூறு வோம். இவை இனப்பெருக்கச் செயலுடன் தொடர்புகொள் ளாத வேறுசில பலன்களையும் விளைவிக்கின்றன. எஸ்ட்ரோ ஜென் என்பது ஒரு பொதுப் பெயராக வழங்கப் பெறுகின் றது. பல பொருள்கள் எஸ்ட்ரோஜென்கள் என்று பிரிவினை செய்யப்பெற்றுள்ளன. அவற்றுள் சில சூற்பைகளில் உற்பத்தி செய்யப்பெறுகின்றன. எஸ்ட்ரோஜென்கள் கொங்கைகளின் வளர்ச்சியைத் தாண்டுகின்றன. அவை எலும்புகள் பக்குவ மடைதலையும் விரைவாக்குகின்றன ; அதன் விளைவாக எலும்பு வளர்ச்சியும் வளராது நின்றுபோகின்றது. இதல்ை தான் பொதுவாகப் பெண்கள் ஆண்களேவிடச் சற்றுக் குட் டையாக உள்ளனர். உடலில் சதைப் படிவத்திலும் எஸ்ட்ரோ ஜென்கள் பங்கு பெறுகின்றன. உடலில் உப்பையும் நீரினேயும் தங்க வைப்பதற்கும் அவை காரணமாகவும் இருக்கல் கூடும். புரொஜெஸ்ட்ரோன் தன்னுடைய இனப் பெருக்கக் கொழி லைத் தவிர கொங்கை இழையம் பக்குவப்படுதலிலும் அனே செய்கிறது. அது உப்பையும் நீரையும் உடலில் தங்கவைப் பதற்கும் துணை செய்யக் கூடும். புரிசைச் சுரப்பி வளர்ச்சி யடையாத நிலையிலுள்ள முட்டாளேப் பற்றி1 மனித இலக்கியங்கள் அனைத்தும் குறிப்பிடுகின்றன. புரி சைச் சுரப்பியின்றி அல்லது அந்தச் சுரப்பி சரியாகச் செயற் படாத நிலையில் பிறக்கும் குழந்தை உடல் வளர்ச்சியிலும் மனவளர்ச்சியிலும் சரியான முறையில் வளர்வதில்லை. ஒரு யுவனிடமிருந்து இந்தச் சுரப்பியை அகற்றிவிட்டால் அவன் ஒரு முட்டாளாக ஆவதில்லை ; ஆனல், அவன் உடலில் நடை பெறும் செயல்கள் அனைத்தும் வேகத்தில் குறைந்து போகின் றன. இந்த இரண்டு செயல்களும் புரிசைச் சுரப்பி எவ்வாறு உடல் வளர்ச்சியிலும் வளர்சிதை மாற்றச் செயல்களிலும்

  • u@@@görayag sysstunutb. tidiot the cretin
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/175&oldid=865961" இலிருந்து மீள்விக்கப்பட்டது