பக்கம்:மானிட உடல்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 மானிட உடல் சேர்த்துக்கொண் டிருக்கின்றது. இவை யாவும் கரு வாழ்க் கையின் பின் பகுதியில் கீழிறங்கிய விசைகளாக மாற்றப் பெறுகின்றன. விந்தேறு குழல் என்பது (படம் 47). தடித்த சுவாைக் கொண்ட சிறிய துவாரத்தையுடைய நாம்பு போன்ற ஒரு குழலாகும். குழலினுள் நுழையும் விசைப் புழுக்கள் அடி வயிற்றிற்கும் கொடைக்கும் இடையிலுள்ள இடத்தின் வழி யாக சிறுநீர்ப் பையின் கழுத்தின் பின்புறத்திற்குக் கொண்டு செலுத்தப்பெறுகின்றன. இங்கு விந்தேறு குழல் விந்துப் பைகளுடன் சேர்ந்து வெளியேற்றும் தாம்புகளாக அமை கின்றன (படம்-48). இத் தாம்புகள் புராஸ்டேட்டைக் கடந்து படம் 48. விரையிலிருந்து வெளிவரையிலும் விாைப்புழுக்கள் செல்லும் வழி (உடலின் பக்கத் தோற்றம்.) 1. விரையிலுள்ள வித்துவைச் சாக்கும் சிறு குழல்கள். 2. எபிடிடைமிஸ். 3. விந்தேறு குழல். 4. விந்துக் கொப்புளங்கள். 5. விந்து பாய்ச்சும் தாம்பு. 6. புராஸ்டேட் சுரப்பி. 7. ஆண் குறி. 8. சிறுநீர்ப் புறவழி. 9. சிறுநீர்ப் பை (சிறிது சிறந்த நிலையில்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/188&oldid=865990" இலிருந்து மீள்விக்கப்பட்டது