பக்கம்:மானிட உடல்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருப்பம் 185 தசையைப் பராமரித்துக் காக்கின்றன ; இதல்ை கருக் குழந் தையின் உயிர் பாதுகாக்கப் பெறுகின்றது. இந்த வளர்ச்சி கிலையில் நஞ்சு கோரியானிக் கோனடோட்சோபினை உற்பத்தி செய்வதில்லை. நஞ்சிலும் கொப்பூழ்க் கொடியிலும் நாம்புகள் அமைவ தில்லை. ஆகவே, தாயின் நாம்பு மண்டலத்திற்கும் குழந் தைக்கும் தொடர்பே இல்லை. எனவே, கரு நிலையில் நேரான ஊட்டம் இல்லை ; அதனைக் கருக் குழந்தை தாயி னிடமிருந்தே பெறுகின்றது. தாயின் நடத்தையையும் உடல் நலத்தையும் பாதிக்கக் கூடிய உள்ளக் கிளர்ச்சிகளேத் தவிர, வேறு நரம்புக் கிளர்ச்சியோ உள்ளக் கிளர்ச்சியோ அதற்கு நேரிடுவதில்லை. கருஅணு வளர்ச்சியுறுங்கால், ட்ரோபோ பிளாஸ்டி னுள் இரண்டு உறைகள் தோன்றுகின்றன. அவை அம்னி யோடிக் உறை என்பதொன்று; மற்ருென்று, யோக் உறை என்பது. அம்னியோடிக் உறை (படம் 56.) முதலில் சிறி தாக இருக்கிறது ; ஆனல், கருப்ப காலம் முழுவதும் பாய் மத்தைத் திரட்டுகிறது. நாளடைவில் கருக் குழந்தை பன்னி ாண்டு அவுன்ஸிலிருந்து (ஒரு பிண்ட்) கால் காலன் (ஒரு குவார்ட்) வரையிலும் அளவு தெளிவான, இலேசான மஞ்சள் பாய்மத்தால் சூழப்படுகிறது. சில சமயம் இந்தப் பாய்மத்தின் அளவு பெரிய மேசைக் காண்டி அளவிலிருந்து காலன் அள வுக்கு (பல குவார்ட்டுகள்) வேறுபடுகின்றது. யோக் உறை என்பது கருப்ப காலத் தொடக்கத்தில் முதன்மையாக இருந்து நாளடைவில் கருக் குழந்தையின் குடல் பகுதியாக மாறி, பின் வளர்ச்சியில் மறைந்து போகின்றது. குழந்தையின் வளர்ச்சி குழந்தை முழு வளர்ச்சி யடைவதற்கு ஒன்பது மாதங் கள் (பத்து சாந்திர மாதங்கள்) அல்லது 275 லிருந்து 280 நாட்கள் வரை ஆகின்றன. கருப்ப காலத்தின் முற்பாதியில் வளர்ச்சிப் பருமன் ஆச்சரியமாக இருக்கும் , ஆல்ை, கிட்ட மான அணுச் செயல்களுடன் கூடிய பிசக்தியேகமான உறுப் புக்களின் வளர்ச்சி வேறுபாடு நடைபெற்றுக்கொண்டிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/223&oldid=866066" இலிருந்து மீள்விக்கப்பட்டது