பக்கம்:மானிட உடல்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 மானிட உடல் கிலையில் செயற்படினும் அவைகூட நரம்பு மண்டலம் என நாம் வழங்கும் மிகச் சிக்கலான வலைக்கண் அமைப்புடைய மண்டலத்தின் கிளைப் பகுதிகளால்தான் நடைபெறுகின்றன. நாம்பு மண்டலத்தின் தனிக் கூறுகளைப் பற்றியும் அவற் றின் கீழ் உள்ள செயல்களின் பிரிவினைகளைப் பற்றியும் முதலில் அறிந்துகொள்ளாதவரையில் அம் மண்டலத்தின் முழுமையையும் புரிந்துகொள்ள முடியாது. அப்பொழுது கூட இந்தப் பிரிவினைகள் யாவும் தன் விருப்பப்படி மனித ல்ை பாகுபாடு செய்யப் பெற்றவை என்பதை கினேவில் இருத்த வேண்டும். வேறு ஏதாவதொரு சிக்கலான மண்ட லத்தைப் போலவே நாம்பு மண்டலமும் ஒரு தனிப் பிரிவு போலவே செயற்படுகின்றது. நாம்பு மண்டலத்தின் அடிப்படையான உயிரணு நியூ சோன் எனப்படுவது , தமிழில் நாப்பம் என்றும் நரம்பு நண்மம் என்றும் கூறலாம். இவ் வகை யணு உடலிலுள்ள வேறு வகையனுக்களிலிருந்து பல்வேறு வகைகளில் வேறு படுகின்றன. நாப்பம் நோயுற்ருலும் அல்லது அதற்கு யாதேனும் தீங்கு நேரிட்டாலும் அதைத் திரும்பவும் பெற முடியாது என்பது மிகவும் முக்கியமான தொன்று. பிறக்கும் பொழுதே மானிட உடல் தனக்கு எப்பொழுதும் தேவை யாகவுள்ள நாம்பு அணுக்களை யெல்லாம் பெற்றிருக்கின்றது. ஒரு நாம்பு அணு சிதைக்கப் பெற்றுவிட்டால், வேறு ஒரு புதிய காப்பம் உண்டாகி அதன் இடத்தைப் பெற முடியாது. நரப்பம் ஒவ்வொரு நாப்பத்திற்கும் தனித் தன்மை உண்டு ; ஒவ்வொன்றும் இரண்டிலிருந்து மூன்று அடி நீளம் வரையிலுமுள்ள சேர்ப்புப் பொருளேப் பெற்றிருக்கின்றது. (படம் , 59). உண்மையாகப் பார்த்தால் இந்த நீளமான பகுதி அல்லது சேர்ப்புப் பொருள் அந்த அணுவறையின் தொடர்ச்சியான நீட்டமே. இந்த நீட்டத்தை காப்ப விழுது' என்றும் நாம்பணு வெளிக் கம்பி என்றும் வழங்குவர். ஒவ்வொரு நாப்பத்திலும் நாப்ப விழுதைத் தவிர எண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/236&oldid=866094" இலிருந்து மீள்விக்கப்பட்டது