பக்கம்:மானிட உடல்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலமும் சிறப்பான பொறிகளும் 247 பல்வேறு சுவை வகைகள் நாக்கின் பல்வேறு பகுதி களால் அறியப்பெறுகின்றன என்று நாம் உற்று நோக்கி அறிந்த உண்மைக்கும் குறிப்பிட்ட சுவை யரும்புகள் விளக் கந் தருகின்றன (படம் - 76). நாக்கின் துனி எல்லாச் சுவை களையும் அறியக் கூடும் ஆனல், அது உப்பையும் இனிப்பை யும் கூர்மையாக அறியக் கூடியது. நாக்கின் பின் பகுதி கசப்புச் சுவையை அறிகின்றது. நாக்கின் இரண்டு பக்கப் படம் 76. நாக்கு. (பல்வேறு சுவை யுணர்ச்சி களைக் காட்டுவது 1. உப்பு, இனிப்பு. 2. புளிப்பு, உப்பு. 3. கசப்பு. பகுதிகளும் உப்பையும் புளிப்பையும் நன்கு உணர்கின்றன. நாக்கின் மேற் பகுதியில் கூர்மையான உணர்ச்சி இல்லை; அவ் விடத்தில் சிறிது நோம் கசப்பு மருந்தையும் வைக்கிருக்க லாம். நாம் விழுங்கும்பொழுதுதான் அந்தக் கசப்பை அறிய முடியும். பார்வைப் புலனுடையதும் கேள்விப் புலனுடையது மான நாம்பு வழிகளுடன் ஒப்பிடுமிடத்து சுவையறி நாம்பு வழி மிகவும் எளிமையானது. நாக்கின் மூன்ரும் பின்பகுதி யிலிருந்து கிளம்பும் நாப்ப விழுதுகள் ஒன்பதாவது மண்டை நாம்பு அல்லது நாத்தொண்டை நரம்பு வரையிலும் செல்லு கின்றன. முன் இரண்டு பகுதியிலுமுள்ள நாப்ப விழுதுகள் ஏழாவது மண்டை நாம்புகளே அல்லது முக நாம்புகளை அடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/285&oldid=866199" இலிருந்து மீள்விக்கப்பட்டது