பக்கம்:மானிட உடல்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 மானிட உடல் எனினும், மணம் அறியும் உணர்ச்சியையும் மூளேக்கு அவை செல்லும் வழிகளையும் சோதித்து அறிதல் அருமையான செயலாகும்; அதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அதிகமாக உள்ளது. உயிரணுக்களே மணம் எவ்வாறு தாக்கு கிறது ? அது பெளதிக மாற்றமா ? வேதியல் மாற்றமா ? என்பதை இன்னும் சரியாக அறிந்தபாடில்லை. எனினும், மூக்கு அலுத்துப் போகும் நிலையினை நாம் அறிகின்ருேம் ; சிறிது நோம் ஒரே மனத்தினையே வைத்திருந்தால் நாம் அதனே அறிந்து வியத்தல் முடியாத நிலை ஏற்படுகின்றது. ஆனல், அலுத்துப் போன மூக்கு இழையம் வேருெரு தன்மையைக் கொண்ட மணத்தை உடனே சரியாகப் பகுத் தறிய முடிகின்றது. ஊற்றுணர்வு தோலிலுள்ள பரிச நாம்புகளால் இவ்வுணர்வு பதிவு செய்யப்படுகின்றது. வன்மை, மென்மை, தன்மை, வெம்மை ஆகியவற்றை அறிவதற்குத் துணையாக இருப்பது ஊற் அறுணர்வு என்பதை மேலே கண்டோம். நகம், மயிர், தவிர மற்ற உறுப்புக்களிலெல்லாம் பரிச உணர்வு உண்டு. கைவிால் நுனியில் இவ்வுணர்வினை அறியும் நிரம்புகள் அதிகமாக வுள்ளன. கை ஒன்றின் அளவை (நிதானமாக) உணர்ந்து கொள்ள முடியும். தோலில் சிறு சிறு நாம்புப் பிஞ்சுகள்" உள்ளன. அவற்ருல்தான் தொட்டதை இன்னதென்று உணர முடிகின்றது. முதுகு, கன்னம், கைகளிலும் இவ்வுணர்வு மிகுதியாக உள்ளது என்று அறியப்பெற்றிருக்கின்றது.

  • Touch Corpuscles.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/288&oldid=866205" இலிருந்து மீள்விக்கப்பட்டது