பக்கம்:மானிட உடல்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசை - எலும்பு மண்டலம் 25? முதுகெலுப்புப் பகுதிகள் போன்ற குறிப்பிட்ட அளவு அசையக் கூடிய எலும்புகள்-ஆம்பியார்த்ரோஸஸ்-தடித்த பட்டை போன்ற காரிழையத்தாலும் குருத்தெலும்பாலான இழையத்தாலும் சேர்க்கப்பெற்றுள்ளன. எளிதாக இயங்க வல்ல டை ஆர்த்ரோஸஸ் எனப்படுபவை பெரும்பாலான மூட்டுக்களில் அமைந்து கிடக்கின்றன; இவற்றில் எலும்புகள் பிரிந்த நிலையில் உள்ளன ; ஆனல், அவை ஒரு நார் போன்ற பையினல் பிரிக்கப் பெற்றுள்ளன. இந்தப் பை மேலும் கீழுமுள்ள அண்டைப் பாப்புக்களே சேர்க்கின்றன. மூட்டின் இடம் மூட்டுச் சுரப்புப் பாய்மம் எனப்படும் ஒருவித சளி போன்ற பாய்மத்தால் நிரப்பப் பெற்றுள்ளது. இப்பொருள் உசாயும் இடங்களே வழுக்கிடச் செய்து இயக்கத்திற்கு செளகர்யமாக அமைகிறது. இந்தப் பாய்மம் ஒரளவு மூட்டி டத்தை அணைந்திருக்கும் மூட்டுச் சவ்விலிருந்து சுரக்கப் பெறுவதால், இந்த மூட்டுக்கள் சுரப்பு மூட்டுக்கள்’ என்று வழங்கப் பெறுகின்றன. சுரப்பு மூட்டுக்களாக அமையும் எலும்புகளின் கோடிகள் குருத்தெலும்பாலானவை. இக் குருத்தெலும்பு எலும்பைவிட அதிகமான அறைக்கும் தன்மையைப் பெற்றிருக்கின்றது. அதனுல் மிருதுவான, மெருகேறின, சரியாகப் பொருந்தும் உசாயும் பாப்புக்களாக அமைந்திருக்கின்றது. மிக அதிகமாக அசையும் சுரப்பு மூட்டுக்கள் மீண்டும் அசையும் வகைகளுக்கேற்றவாறு இனப்படுத்தப் பெறு கின்றன. இது ஒரளவு உராயும் பாப்புக்களின் சாயலுக் கேற்றவாறும் ஒரளவு கட்டுப்படுத்தும் பக்தகங்கள் ஒட்டி யிருப்பதற் கேற்றவாறும் நிர்ணயிக்கப் பெறுகின்றது. சில மூட்டுக்கள் ஒரே அச்சில் மட்டிலும் அசையுமாறு கட்டுப்படுத்தப் பெற்றுள்ளன. சில மூட்டுக்கள் ஒரே சம தளத்தில் அசைகின்றன ; விரல்களிலும் முழங்காலிலும் அமைந்திருக்கும் கீல் மூட்டுக்கள் இவற்றிற்கு எடுத்துக்க ளாகும். (புகைப்படம் உஎ-ஐப் பார்க்க). சில மூட்டுக்கள்

  • synovial joints. *resilience. மா. உ. 17
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/295&oldid=866222" இலிருந்து மீள்விக்கப்பட்டது