பக்கம்:மானிட உடல்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசை - எலும்பு மண்டலம் 259 அறிந்ததே ஆல்ை, அவ்வடிவம் பல எலும்புகளாலானது என்பது மிகவும் வெளிப்படையாகத் தெரிவது அன்று ; தட்டையான, சிறிது வளைந்து மேற்புறமும் பக்கவாட்டிலும் பின்புறத்திலும் மூளையை மூடிக்கொண்டுள்ள மண்டை எலும்புகள் பிறக்கும்பொழுது சிறிது அசையக் கூடியவை. எனவே, குழந்தையின் தலைவடிவம் பிரசவத்தின்பொழுது சிறிது உருவப்படுத்தக் கூடியதாக உள்ளது. ஆனல், அவ் படம் 80. கபால எலும்புகள் (முன்புறம்.) நெற்றி எலும்பு. மேல் தாடை எலும்பு. கீழ்த் தாடை எலும்பு. கதுப்பு எலும்பு. பொட்டெலும்பு. . ஆப்பெலும்பு. . மண்டைப் பக்க எலும்பு.

வெலும்புகள் விரைவாக நெருக்கமான நார்போன்ற இழையத் தால் ஒட்டப்பெற்றுவிடுகின்றன ; அதன் பிறகு அவை அசையக் கூடாமற் போகின்றன. கபாலம் மூளையின் சிறந்த பாதுகாப்பாக அமைந்திருந் தாலும், மூளையின் பெருக்கம் அல்லது அதன் சவ்வுகளின் பெருக்கத்தின்பொழுது அதிக இடம் தேவைப்படும்பொழுது மிகவும் பிரத்தியேகமான தொரு பிரச்சினை உண்டாகிறது. உடலில் வேறெங்கும் இட வசதியைச் செய்துகொள்ள முடியும். கபாலத்தில் ஒரு சிறிய குருதி யொழுக்கும் மண்டை யினுள் அதிக அமுக்கக்கை விளைவித்து சக்கி விடுவிப்பு தேவைப்படுமாறும் செய்துவிடுகிறது ; இத்தகைய தொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/297&oldid=866227" இலிருந்து மீள்விக்கப்பட்டது