பக்கம்:மானிட உடல்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 மானிட உடல் சேர்ந்தே அசையக் கூடியதாக உள்ளது. பேஸ் பந்து விளே யாட்டில் ஒரு பிட்சரின் அசைவுகளைக் கவனிப்பவர்கள் இந்தக் கட்டமைப்பு உடலின் வேறெந்தப் பகுதியிலும் முடியாத மிகவும் விரிந்த எல்லையில் அசையும் அசைவுகளுக்கு செளகரியமா யிருப்பதை அறியலாம். புயத்தில் மூன்று நீளமான எலும்புகள் உள்ளன. உா மான மேற் கை எலும்பு (முண்டா எலும்பு) மேற்பாதியாக அமைந்து அதன் உருண்டையான தலை தோள்பட்டை எலும்பிலுள்ள கிண்ணத்துடன் பொருந்துகிறது. இது நன்ருக மடித்த கைமுஷ்டி இன்னெரு உள்ளங்கையில் பொருந்துவதுபோல் இருக்கிறது. ஆரை எலும்பு, முழங்கை எலும்பு என்ற இரண்டு மித மெல்லிய எலும்புகளும் சேர்ந்து கீழ்ப்புயமாக அமைகின்றன. மணிக்கட்டில் பல சிறிய முக எலும்புகள் உள்ளன ; அவற்றில் மூன்று காண்டி லாய்டு அமைப்பாக அமைகின்றன ; இந்த அமைப்பு ஆசை எலும்பு, முழங்கை எலும்புகளின் கீழ்ப் பகுதியுடன் பொருந்துகிறது (புகைப்படம் - உடு - ஐப் பார்க்க). மணிக் கட்டில் முளைபோன்ற அசைவிற்குக் காரணம் இந்த இாண்டு நீள எலும்புகளும் ஒன்றற்கொன்று அசைந்து கொடுப்பதே யாகும. எத்தனை நுண்ணிய சிறிய எலும்புகள் சேர்ந்து கையா கவும் விரல்களாகவும் அமைகின்றன என்பதை நாம் எளிதில் பார்க்கலாம். அவ்வளவு எண்ணிக்கை எலும்புகள் இருப்ப தால்தான் வினைக் கருவியில் வாசிப்போரும், கைக்கடிகாரம் செய்வோரும் கையையும் விரல்களையும் உயர்ந்த முறையில் மிக நுட்பமாக வளத்து இயக்குதற்கு எளிதாக இருக் கின்றன. சிறப்பாக, பெருவிால் நன்கு அசையக் கூடியதாக உள்ளது. காரணம், அதன் உள்ளங்கை எலும்பு ஏனைய வற்றைவிட சற்றுக் தொலைவில் தனித்து கிற்கின்றது. மணிக் கட்டை யசைத்துக்கொண்டு நாம் பெருவிரலால் சிறு விாலைத் தொடமுடிகின்றது. கோடிகளிலுள்ள எல்லா மூட்டுக்களுமே சாப்பு மூட்டுக்களாகும் : அவை யாவும் மூட்டுச்சுரப்புச்

  • Pitcher
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/304&oldid=866245" இலிருந்து மீள்விக்கப்பட்டது