பக்கம்:மானிட உடல்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல் 279 வெளிப்புற இறுதியிலுள்ள கோலடுக்கு உடலிலுள்ள பல்வேறு பகுதிகளிலும் எவ்வாறு தடிப்பு நிலையில் மாறுபடு ன்றது என்பதை நாம் எளிதில் காணலாம். பாதங்களின் அடித்தோல் போன்ற திறந்த நிலையிலுள்ள பகுதிகள், அவை அடிக்கடி காயம் ஏற்படக்கூடிய நிலையிலிருப்பதால் மிகவும் தடித்த கொடின் பொருளாலாக்கப்பெற்ற இறந்த உயிரணுக் களேக் கொண்ட புறக்கவசத்தைப் பெற்றிருக்கின்றன. இந்த நிலை ஏற்படுவதை நாம் காலஸ்கள்’ என்று வழங்குகின்ருேம். நகங்கள், பிசாணிகளின் குளம்புகள் போன்ற அடர்த்தி யான உயர்ந்த கொாட்டின் பொருளால் ஆக்கப்பெற்ற இறக்க இழையம் மிகவும் கெட்டியாகவும் உறுதியாகவும் இருக்கும். அடுக்கடுக்கான செதிளுள்ள எபிதீலியம் மூக்கு, வாய், யோனிக் குழல் ஆகிய இடங்களிலுள்ள அணேச்சவ்வில் காணப்படுகின்றன. நாம் எதிர் பார்ப்பதுபோல, ஒரளவு பாதுகாப்பாகவுள்ள அவ்விடங்களில் சிறிதளவுகூட கெராட் டின் என்ற பொருள் இல்லை. பொடிநிறமுள்ள மெலானின்’ என்ற நிறமியிருப்பதால் தோலுக்கு நிறம் ஏற்படுகிறது. மேல் தோலின் அடிப்புறத் தின் அடுக்கில் இவை ஏராளமாகவுள்ள பிரத்தியேகமான உயிரணுக்களால் உற்பத்தி செய்யப்பெறுகின்றன. நிறமியின் அளவு பெரும்பாலும் குடி வழியால் நிர்ணயிக்கப் பெறு கின்றது ; ஆனால், அது ஹார்மோன்கள், சூரிய ஒளி போன்ற வேறு அம்சங்களாலும் அதிகமாகப் பாதிக்கப்பெறுகின்றது. நம் உடலில், சில புள்ளிகளில் கிறமிகளை உண்டாக்கும் உயிரணுக்களின் அளவில் சிறிதளவு மாறக்கூடிய போக்குடன் நாம் பிறக்கின்ருேம். உடலின்மேல் ஊதா மேற்கதிரைச் செலுத்தினுல் பொதுவாக மெலானின் உண்டாகல் அதி கரிக்கும் ; அதுவும் இந்தப் புள்ளிகளில் மட்டிலும் அப் பொருள் உற்பத்தி அதிகரிக்கும். நிறமி பாதுகாப்பாகவுள்ள ஒரு பொருள். மெலானின் உற்பத்தி அதிக அளவு செய்ய இயலாத நிலையிலுள்ளவர்கள் கருமை நிறத் தோலினையுடைய வர்களைவிட வெயில் காய்வதால் மிகவும் தொல்லைப்படு வார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/317&oldid=866272" இலிருந்து மீள்விக்கப்பட்டது