பக்கம்:மானிட உடல்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 மானிட உடல் சிறப்பாக இாண்டு காரணங்களால் மெலானின் உற்பத்தி யில் மாறுபாடு நிகழ்கின்றது. ஒன்று, கருப்பம் உறுதல் ; மற்ருென்று, மாங்காய்ச் சுரப்பி போதாமை. கருப்பம் உற் றிருக்குங்கால் சாதாரணமாக முகத்திலும் கழுத்திலும் காண பெறும் பொடிநிறமுள்ள புள்ளிகளைப்பற்றியும் பொடி கிற முள்ள முலைக்காம்புகளேப்பற்றியும் நாம் ஏற்கெனவே குறிப் பிட்டிருக்கின்ருேம். அவை ஒரளவு தலைகீழாக மாறக் கூடியவை ஆல்ை, ஒரு தாய் அதிகக் குழந்தைகளே பெறக் கூடுமானல் அவளிடம் இங்கில அதிகரிக்கவும் கூடும். மெலானின் என்ற பொருள் அமினே அமிலங்களில் ஒன்ருன டைரோஸின் என்ற அமிலத்திலிருந்து உண்டா கிறது. இந்த டைனோஸின் அட்ானிலின், நார்அட்சனிலின் என்ற பொருள்களின் முன்னேடிப் பொருளாகவும் (முதல் கிலேப் பொருள்) இருக்கின்றது. மாங்காய்ச் சுரப்பிகள் அதிக கோயின் இருப்பிடமானுல், கோலின் மீதும் வாயி லுள்ள சளிச்சவ்விலும் அதிகமான மெலானின் காணப் படுகின்றது. இவ்வாறு அதிகமாகத் தோன்றுவதன் காரணம் இன்னும் சரியாகப் புலகைவில்லை ; ஆயினும், மாங்காய்ச் சுரப்பியின் புறணி மெலானின் உற்பத்தியைத் தடுக்கின்றது என்பதற்குச் சிறிதளவு குறிப்பு புலனுகின்றது. ஆகவே, மாங்காய்ச் சுரப்பியின் புறணியின் செயல் தடைப்படு மால்ை, அதிகமான மெலானின் உற்பத்தி ஏற்படுகின்றது. அத்தகைய இழைப்பையுடைய ஒருவர், வெள்ளேகிற இனத் தவராக இருப்பினும், கறுப்பு மனிதருக்கும் வெள்ளே மனித ருக்கும் பிறந்தவர் போன்று கருமை நிறமடையக் கூடும். இயல்புக்கு மீறிய நிறமி ஏற்படுதல் புள்ளி புள்ளியாகத் தோன்றும் ; அவை வரும், போகும். சிறிய சுபக்குறியான கொப்புளங்கள் அல்லது பிறவி குறைபாடுகளாலான கிறமுள்ள மச்சங்கள் கிட்டத்தட்ட ஒவ் வொருவருடைய தோலிலும் காணப்பெறுகின்றன. அவை மிகத் தெளிவாக, மேடான நிலையில் அல்லது மட்டமான நிலை யில், பொடிகிறப் புள்ளிகளாக அமைகின்றன. அவை நம்மு டைய வாழ்நாளில் அளவில் சிறிதும் மாறுபாடு அடைவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/318&oldid=866274" இலிருந்து மீள்விக்கப்பட்டது