பக்கம்:மானிட உடல்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல் 281 அடித்தோல் தோலின் ஆழமான பகுதி, அஃதாவது அடித் தோல், (படம் - 90.) ஒரு நார் போன்ற அடுக்காகும் ; அதில் குருதிக் குழல்களும், கிணநீர்க் குழல்களும், நரம்புகளும் எண்ணற்றவை உள்ளன. அடித் தோவில் மேல் தோலின் இணைப்புக்களான வேர்வைச் சுரப்பிகள், எண்ணெய்ச் சுரப்பி கள், உரோம உறைகள்" ஆகியவைகளும் அடங்கியுள்ளன. இந்த அமைப்புக்கள் யாவும் உடலின் முழு நலத்திலும் முக்கிய பங்கு கொண்டுள்ளன ; அவற்றுள் சிலவற்றின் மூலம்-காம்பு முடிவுகள்-மனிதன் தன்னைச் சுற்றியுள்ள உலகுடன் உறவுகொள்ளத் துணை செய்யப் பெறுகிருன். மேல் கோலுக்குக் கீழேயுள்ள வலைக்கண் நுண்புழைகள் உடல் சூட்டைக் காப்பதற்கும் அல்லது குளிர்விப்பதற்கும் ஏற்றவாறு விரிவடைகின்றன, அல்லது சுருங்குகின்றன. வெந்நீர்க் குளியல் ஆனதும் உடல் முழுவதும் மலர்ச்சியுடன் காணப்படுகிறது ; மேற்பரப்பிலுள்ள நண்புழைகள் விரிங் துள்ளமையே இதற்குக் காரணமாகும். உடனே உடல் போர்த்தப் பெருவிட்டால், வியர்வை மூலம் வெளிப்படும் அகிகமான நீர் ஆவியாக மாறுவதால் வேகமாக உடலின் வெப்பம் தணிகின்றது. நிணநீர்க் குழல்கள் அழுக்கமான மேல்தோல் இருந்த போதிலும் அதனேயும் துளேத்து உட்சென்ற பாதுணுக்கு களே! வெளியில் அகற்றுவதற்குத் துணை செய்கின்றன. பாக்டீரியாவும் அழுக்கும் வெளியேறும் சினநீர் முண்டுகளுக் குக் கொண்டுபோகப் பெறுகின்றன; இகளுல் உடல் தீங்கற்ற நிலைமையைப் பெறுகின்றது. சில சமயம் தோலின் அடியில் அல்லது தோலுக்குள் கூட்டு மருந்துக்கள் ஊசிமூலம் புகுத் தப்பெறுகின்றன. இவை நிணநீர்க் குழல்களாலும் எண்புழை களாலும் பொதுக் குருதி வட்டத்தில் உறிஞ்சப்பெறுகின்றன. நரம்பு முடிவுகள் எண்ணற்றவை உள்ளன ; நம்முடைய உடலின் ஒவ்வொரு பகுதியின் நிலையையும் தெரிந்துகொள்

  • Hair follicles. tforeign particles.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/319&oldid=866275" இலிருந்து மீள்விக்கப்பட்டது