பக்கம்:மானிட உடல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மானிட உடல் களின் அளவு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குருதியோட்டத் தில் மிக மிக வியத்தகு முறையில் மாருத நிலையிலுள்ளது. குழந்தைகளிடமும் பால் வேற்றுமைகளின் காரணமாகவும் இங்கிலையில் சிறிது மாற்றம் காணப்படினும், நல்லுடல் பெற்ற வர்களின் குருதியில் இப்பொருள்கள் சாதாரணமாக மாழுத நிலையில்தான் உள்ளன. உடலிலுள்ள பல உறுப்புக்கள் சரியாக இயங்காவிடில் இந் நிலையில் ஏற்றமோ இறக்கமோ காணப்படத்தான் செய்யும். இம் மாற்றமே உடலுக்கு நேரிட இருக்கும் தொல்லையின் தொடக்கமாக இருக்கவும் கூடும். பித்த நிறமிகள் கல்லீரலினுல் அகற்றப்பெறுவதால், குருதியிலுள்ள தேவைக்கு மீறிய அளவுள்ள பித்த சோல் கல்லீரலுக்கு அல்லது கல்லீரலின் பகுதிகளுக்கு நோய் நேரிடக் கூடும். அல்லது, சிறுநீர் வழியாக வெளிப்படக்கூடிய சிறுநீர் உப்புப் போன்ற உயிரணுவின் வளர்சிதை மாற்றத்திலுள்ள பொருள்களைச் சிறு நீரகங்கள் சாதாசன மாக அகற்ருவிடில், அவை குருதியில் அதிக அளவு தங்கி விடும். அளவிடப்பட்ட ஏதாவது ஒரு பொருளேக் கொண்டு நேரிடக்கூடிய சங்கடத்தை இன்ன தென்று சரியாகக் கூற முடியாது ; ஆனல், பல பொருள்களை ஒருசேரக் கொண்டு ஒரு விசேடச் சாயலின் முறைபிறழ்வான நிலைகளே அறிய லாம். இதனுல், வேறுவிதமான சோதனையால் கண்டறிவதை விட அதிகமான தெளிவை அடைய முடிகின்றது. எனவே, குருதி நமது உடல் நலத்திற்கு இன்றியமையாததாக இருப்ப துடன், நம்முடைய பல நோய்களையும் தெரிவித்துக் கண்ணுல் காண முடியாத சங்கடத்தைப்பற்றி எச்சரிக்கையும் தரு கின்றது. குருதியின் இரண்டு வித உயிரணுக்கள் குருதியிலுள்ள உயிரணுக்கள் இரண்டு பெரும் பிரிவு களில் அடங்குகின்றன. அவை : குருதிக்குச் செந்நிறத் தைத் தரும் சிவப்பு உயிரணுக்களும் பல்வேறுவித வெள்ளே யணுக்களும் ஆகும். இவற்றுடன் சிறு வட்டங்கள் ”

  • platelets.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/42&oldid=866439" இலிருந்து மீள்விக்கப்பட்டது