பக்கம்:மானிட உடல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதியும் நிணநீரும் 37 அமைப்பால் தடைப்பட்டு மெதுவாகச் செல்லுகிறது. இங்கு தான் சிவப்பு அணுக்களின் இறுதியான சிதைவு நடைபெறு கின்றது. எரித்சோசைட்டிஸ் (சிவப்பு அணுக்கள்) சிவப்பாக இருப்பதற்குக் காரணம் அவற்றிலுள்ள குருதி நிறமியே. குருதி நிறமி என்பது பிசிதமும் அயச்சத்து நிறமியும் கலந்த ஒரு கூட்டுப்பொருள். இக்கூட்டுப் பொருள் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. இதுதான் துரையீரலிலிருந்து உடலெங்குமுள்ள உயிரணுக்களுக்கு உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாத உயிரியத்தைக் கொண்டு செல்வதற் குத் துணைபுரிகிறது. இதை மிக எளிதாகவும் நிறைவேற்று கிறது. நல்ல காற்றை நாம் உள்ளே இழுக்கும்பொழுது, உயிரியம் நுரையீரலிலுள்ள குருதியை அடர்ந்து சூழ்கிறது. குருதியிலுள்ள குருதி நிறமியின் அயச்சத்து விரைவாக இந்த உயிரியத்துடன் தளர்ந்த நிலையில் சேர்கிறது. உடனே சிவப்பு அணுக்கள் உடலெங்குமுள்ள பகுதிகளுக்குச் செல்லு கின்றன. உயிரியத்தைப் பயன்படுத்தும் உறுப்புக்களில், இச் சிவப்பு அணுக்களிலுள்ள குருதிகிறமி குறைந்த உயிரியத்தை யுடைய சூழ்நிலையின் நடுவில் இருக்கும் கிலே ஏற்படுகிறது. உடனே தளர்ந்த நிலையில் தன்னுடன் சேர்ந்துள்ள உயிரியக் சுமையில் பெரும்பகுதியை அங்கு கொடுத்து விடுகின்றது. உறுப்புக்களிலிருந்து அது வடிகுழல்கள் வாயிலாக நரை யீரலுக்குத் திரும்புங்கால் உயிரியம் பெற்றிருந்த இடத்தை வேருெரு வாயு பெறுகின்றது. இதுதான் கரியமில வாயு ; சுறுசுறுப்பாக செயற்படும் இழைய உயிரணுக்களிலிருந்து இது விடுவிக்கப் பெறுகின்றது. இது குருதியால் துரையீச லுக்குக் கொண்டு வரப்பெற்று அங்குள்ள காற்றுடன் கலந்து வெளியே அகற்றப் பெறுகின்றது. குருதிநிறமியுடன் கரியமில வாயுவின் பெரும்பகுதி சேரும்பொழுது, அது குருதியிலுள்ள நீர்க் குருதியில் (பிஸாஸ்மா) சோடியம் பைகார்பனேட்டாகவும் தங்குகிறது. காற்று மண்டலத்திலுள்ள ஒரு வாயுவை மக்கள் சகிக்க முடியா தென்பது யாவரும் அறிந்த விஷயம் ; அவ்வாயுவை குருதி நிறமி நல்ல தென்று ஏற்றுக்கொள்ளும். அவ்வாபு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/45&oldid=866445" இலிருந்து மீள்விக்கப்பட்டது