பக்கம்:மானிட உடல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதியும் நிணநீரும் 43. மாகும். அவை ஒரளவு ஒட்டிக்கொள்ளும் தன்மையைப் பெற்றுள்ளன. காயப்பட்ட குருதிக்குழல் போன்ற சொ சொாப்பான பரப்புக்களில் ஒட்டிக்கொள்ளக் கூடியவை. இங்கு அவை ஒன்ருகத் திாண்டு, மாற்றம் அடைந்து க்ரோம் போகினேஸ் என்ற பொருளை விடுவிக்கின்றன ; இந்தக் த்ரோம்போகினேஸ்தான் குருதியுறைதலைத் துவக்குகிறது. குருதியுறைதலுக்குப் பல்வேறு வகைப் பொருள்கள் இன்றியமையாதவை. அவற்றுள் மிக முக்கியமானவற்றை மட்டிலும் இங்கு கூறுவோம். இங்கப் பொருள்கள் ஒன்று சேர்ந்து எதிர்வினை புரிந்து த்ரோம்பின் என்ற பொருளேத் தோற்றுவிக்கின்றன ; க்சோம்பின் என்பது ஒருவகை துாைப்புளியமாகும். இப்புளியம் நின சேகம் (பைப்ரினே ஜென்) என்ற பிசிகத்துடன் சேர்ந்து செயல் புரிகின்றது ; நிணநீரகம் பெரும்பாலும் கல்லீரல் உயிரணுக்களில் உண் டாவது. த்சோம்பின் என்ற பொருள் நின சேகத்துடன் சேர்ந்து அதை உறை நிணநீராக மாற்றுகிறது. குருதி உறைதலில் செயற்படும் முக்கியமான பொருள் களின் உறவு முறையை அடியிற் கண்டவாறு விளக்கலாம். த்ரோம்போகினேஸ்-புரோத்ரோம்பின் + கால்சியம்-- பல துணை அம்சங்கள் = க்சோம்பின். த்ரோம்பின் + நிணநீரகம்=உறைநிணநீர். த்ரோம்போகினேஸ் என்ற பொருள் த்ரோம்போ சைட் என்ற பொருளில் அல்லது குருதியிலுள்ள பிளாஸ்மா வில் உண்டாகிறது ; அங்கு க்ரோம்போசைட்டால் ஊக்க மூட்டப்பெறுகின்றது. புரோக்ரோம்பின் கல்லீரலிலிருந்து உற்பத்தியாகிறது ; அது உண்டாகும்பொழுது சிறுகுடல் பிரதேசத்தில் தேவையான அளவு K-விட்டமின் என்ற உயிர்ச்சத்து உறிஞ்சப் பெறுகின்றது. குருதியோட்டத்தில் சிறு அளவுகளில் காணப்பெறும் கால்சியம் உறையும் கிரி யைக்குப் போதுமானதாகும். இந்தக் கிரியையில் துணையாக வுள்ள அம்சங்கள் யாவை என்று ஆராயப்பெற்று வருகின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/51&oldid=866459" இலிருந்து மீள்விக்கப்பட்டது