பக்கம்:மானிட உடல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூச்சுறுப்பு மண்டலம் 67 கலந்த வலைக்கண் துண்புழைகளேவிட நுட்பமானவை. எனி அனும், இந்த நார்கள் திடகாத்திரமான துரையீரலமைப்பிற்குப் போதுமானவை ; தம்முடைய சிற்றறைகளிலிருந்து காற்றை வெளிப்படுத்த நீண்டு சுருங்குவதற்கு ஏற்றவை. காற்று இடைவெளிகளும் அவற்றின் மூச்சுப் பிரிவுக் குழல்களும் இணைந்துள்ள அமைப்பு முறையை, தனித் தனி அறைகளாகப் பிரிக்கப்பெற்றுள்ள ஒரு பெரிய வீட்டுடன் ஒப்பிடலாம். அறைகள் யாவும் பொது மண்டபத்துடன் வாயில்களால் தொடர்பு கொண்டுள்ளதைப்போல் மூச்சுச் சிற்றறைகள் தனியாகவுள்ள மூச்சுப் பிரிவுக் குழலுடன் கிறந்த நிலையிலுள்ளன; இந்தக் குழல் பெரு வழிகளுடன் தொடர்புகொண்டுள்ளது. பக்கவாட்டிலுள்ள உட்கட்டுக் களின் அறைகள் யாவும் ஒன்றற்கொன்று மிக நெருங்கி யுள்ளன; ஆனல், ஒரு உட்கட்டிலிருந்து பிறிதொரு உட்கட் டிற்கு வாயில்கள் இல்லை. எனினும், காற்றறைகளின் சுவர் கள் மிக மெல்லியதாகவும் நுண்துளைகளுடன் கூடியதாகவும் இருப்பதால் ஒாறையிலிருந்து பிறிதொன்றற்குப் பாய்மம் எளிதில் செல்லக் கூடும். இவ்வாறு செல்வது கடினமான சுவர்களே எட்டும்வசையில் தொடர்ந்து நடைபெறும். இச் சுவர்கள்தாம் நுரையீரல் மீண்டும் கண்ணறைகளாகப் பிரிந்து செல்வதற்கு அரண்களாக அமைந்துள்ளன. இந்த அரண் கள் நார்களாலான சுவர்கள்; அவை நுரையீரலின் சிறிய உட் பிரிவுகளைச் சூழ்ந்துள்ளன. அவை தேவையற்ற பொருளே, சிறப்பாக தொற்றுநோய் கரும் உயிரிகளே, நுரையீரலின் ஒரு பகுதியில் வைத்துக்கொள்ளக் துணை புரிபவை. இவ்வாறு அச்செயலை அவை ஒன்று திரட்டி இந்த உயிரிகளால் துரையீர லுக்கு ஏற்படும் தீங்கினைக் குறைத்தல் கூடும். துரையீரல் இழையத்தின் மிகப் பெரிய பிரிவு ஈரலிதழ் ஆகும். இத்தகைய சாலிதழ்கள் இரண்டு இடப் பக் கத்திலும் மூன்று வலப் பக்கத்திலும் உள்ளன. இந்த ஈரலிதழ்களின் மூச்சுப் பிரிவுக் குழல்கள் ஒரு பொதுத் தண்டிலிருந்து தொடங்குகின்றன என்பதைத் தவிர, அவ்' விதழ்கள் ஒன்ருேடொன்று தொடர்புகொள்ளவில்லை. ஒர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/91&oldid=866542" இலிருந்து மீள்விக்கப்பட்டது