பக்கம்:மானிட உடல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ8 மானிட உடல் இதழின் நோய் அங்கேயே அமைந்து பிற இதழ்களுக்குப் பசவ்ாத நிலை ஏற்படவும் கூடும். இதல்ைதான் சத்திர சிகிச்சையாளர் அந்த இதழை அகற்றி அதிலிருந்து மூச்சுப் பிரிவுக் குழல்கள் மூலமாகவோ குருதிக் குழல்கள் மூல மாகவோ வேறு இதழ்களுக்கு நோய் பாவாதவாறு காப் பாற்றுவதைக் காண்கின்ருேம். சுவாசித்தல் நடைபெறும் விதம் இதுகாறும் மூச்சு மண்டலத்தின் அமைப்பை விளக்கி னுேம். இனி சுவாசித்தலின் செயல் எவ்வாறு நடைபெறுகின் றது என்பதை விளக்க வேண்டும். காற்று உள்ளுக்குச் செல் வதில் செயற்படும் விசை நுரையீரலை மட்டிலும் பொருத்த தல்ல ; அது மார்பறையிலுள்ள தசைகளையும் உகாவிகர்னத் தையும் பொறுத்தது. மார்பறையிலுள்ள தசைகள் சுருங்கும் பொழுது, விலாவெலும்புகள் மேல் நோக்கியும் வெளிப் புறத்தை நோக்கியும் இழுக்கப் பெறுகின்றன. அதே சமயத்தில் உதாவிதானம்-மார்பறையையும் வயிற்றறை யையும் பிரிக்கும் கசைச் சுவர்-சுருங்குகின்றது. ஒய்ந்திருக் கும்பொழுது அது உருண்டை வடிவமான கூடாாம் போலி ருக்கிறது. அது சுருங்கும்பொழுது கீழ்நோக்கித் தட்டை வடிவமாகி மார்பறையைப் பெரிதாக்குகின்றது. (படம் 24). உடனே நுரையீரல்கள் விரிந்து மார்பறை முழுவதையும் கிாப்புகின்றன. மார்பறைச் சுவருக்கும் நுரையீரலுக்கும் இடையில் வெற்றிடம் இருக்க முடியாததால் இந்த விரிவு ஏற்படுகின்றது. இவ்வாறு ஏற்படும் விரிவால் நுரையீரலி லுள்ள வாயுவின் இழுவிசை குறைந்து அதிக அமுக்க முள்ள வாயு மண்டலத்திலிருந்து காற்று விரைவாக உள்ளுக் குப் பாய்கின்றது. இதுதான் சுவாசம் இழுத்தல் என்று வழங்கப்படுவது. சுவாசம் வெளிவிடுதல் என்பது பெரும்பாலும் செயலற்ற நிலையில் ஏற்படுவது. மார்பறைக் தசைகளும் உதா விதானமும் நெகிழ்கின்றன ; (படம் - 25). விலாவெலும்பு கள் பழைய கிலேமைக்கே நெருங்கி வருகின்றன ; நுரையிால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/92&oldid=866544" இலிருந்து மீள்விக்கப்பட்டது