பக்கம்:மான விஜயம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்

70.* மையின்மா மேனி கிலமென்னு நல்லவள் - செய்யது போர்த்தாள்போற் செவ்வென்முள்-பொய் தீர்ந்த

பூந்தார் முரசிற் பொருபுன னிர்காடன் காய்ந்தாரை யட்ட களத்து.' (65)

  • ஒஒ வுவம ணுறழ்வின்றி யொத்ததே 75. காவிரி காடன் கழுமலங் கொண்டாண்

மாவுதைப்ப மாற்ருர் குடையெலாங் கீழ்மேலா யாவுதை காளாம்பி போன்ற புனனுடன் - மேவாரை யட்ட களத்து.' - (66)

  • வேனிறத் திங்க வயவரா லேறுண்டு 80. கானிலங் கொள்ள கலங்கிச் செவிசாய்த்து

மாநிலங் கூறு மறைகேட்ப போன்றனவே பாடா ரிடிமுரசிற் பாய்புன னிர்நாடன் கூடாரை பட்ட களத்து' (67)

(செய். - 65) மை இல் மா மேனி, குற்றம் இல்லாத அழகியமேனியை யுடைய, நிலம்ென்னும் எல்லாள் - பூமியாகிய பெண், செய்யது போர்த்தாள்போல் - சிவர்த போர்வையைத் தன்மேற் போர்த்தாள்போல, செவ்வென்முள் - செக்கிறர் தோன் றக் காட்டினுள் பொய்தீர்க்க-பொய்யைச் சொல்லுதலும் கேட்டலும் விட்ட, பூந்தார் முரசின் - அழகிய மா?லயணிந்த முரசினையுடைய, பொருபுனல் நீர் நாடன்-கரையை மோதும் அலேவீசும் காவிரி நீர்வளநாடன், காய்க்காரை அட்டகளத்து-வெகுண்டு தன்மேல் வர்த பகைவரைக் கொன்ற போர்க்களத்தின்கன்.

ct. பூண்குலாம் வனமுலைப் பூமிதேவி தான், காண்கலேன் கடியன கண்ணி ஞலெனச், சேண்குலாம் கம்பலம் செய்யதொன்றினன், மாண் குலாங் குணத்தினன் மறைத்திட் டாளாோ.” (சிங். 2288). பயிர் பச்சென்றது, வெள்ளென வெளுத்தது, என்பனபோலச் செங்கிறங் காட்டினுளென்பதற்குச் செவ்வென்முள் என்றனர். பொய்தீர்ந்த நாடன் எனச் சேர்க்க. தாரையும் முரசையு முடைய நீர்நாடன் எனலுமாம். பொய் தீர்ந்த என்பதைக் காவிரிக்கு அடையாக்கிப் பொய்திர் நீர் எனக் கூட்டலுமாம். cf. வான்பொய்ப் பினும் தான் பொய்யா, மலைத்தலேய கடற்காவிரி (பட்டின. 5, 6).

(செய் - 66) (பொழிப்புரை) காவிரி நீர்வளநாடன், கழுமல மென்ற ஊரினக் கைக்கொண்ட நாளில் அவன் பகைவரைக் கொன்ற போர்க்களத்தின் கண் புரவி களான் உதைக்கப்பட்ட மாற்ருர் குடைகள் எல்லாம் பசுக்களாற் கீழ்மேலாய் உதைக் கப்பட்ட காளாம்பிகளை யொத்தன; இவ்வுவமை கூறுமிடத்து ஒப்புமை சிறிதும் மாறுபாடின்றிச் சிறப்புடைத்தாகவே பொருந்திற்று. ஒ ஓ - ஒ என்னும் இடைச் சொல் சிறப்புணர்த்தி அடுக்கி நின்றது. உவமன் - உவமை, உறழ்வு - மாறுபாடு. ஒத்தது - பொருந்திற்று. காளாம்பி - குடைக்காளான்; காய்க்குடை. குடைக்குக் காளாம்பி யுவமை.

(செய். -67) (பொழிப்புாை) ஒலித்தல் மிகுந்த இடிபோலமுழங்கும் முரசினை யுடைய அலைகள் பாய்ந்து செல்லும் காவிரிர்ே வளநாடன் பகைவரைக் கொன்2 போர்க்களத்தின்கண், வேல் மார்பின்கண் அழுந்த வீரர்களான் எறியப்பட்டுக் குதி ரைகள் கால்தளர்ந்து வீழ்ந்து செவிகளைச் சாய்த்து கிலமகள் கூறும் மந்திரங்களைச் கேட்பன போன்றன. நிறம் - மார்பு. இங்குதல் தங்குதல்; அழுந்துதல்,

- * களவழி காற்பது r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/53&oldid=656118" இலிருந்து மீள்விக்கப்பட்டது