பக்கம்:மாபாரதம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

மாபாரதம்

இருந்த பிடிப்பு அவனை விட்டு நீங்கியது. அந்தச் சமயம் பார்த்துத் திட்டத்துய்மன் அம்பு ஒன்று விட்டு அவன் தலையைக் கொய்து வேறுபடுத்தினான். துரோணன் மறைந்தான்; அவன் தலையும் சாய்ந்தது; தலைமையும் ஒய்ந்தது.

தந்தையை இழந்த அசுவத்தாமன் ஆறாத்துயரால் அவலமுற்றான். திட்டமிட்டுச் செய்த இந்தக் கொலைச் செயலைக் கண்டு மனம் அழிந்தான். ‘இது கொடுமை’ என்று முடிவு செய்தான். திட்டத்துய்மன் துரோணனைக் கொன்றது வஞ்சகம் என்றும், குருத்துரோகம் என்றும் அசுவத்தாமன் விளம்பினான்.

பாண்டவர் ஐவரையும் அவர்தம் மக்களுடன் அழிப் பேன் என்றும், திட்டத்துய்மனை ஒழிப்பேன் என்றும் சூளுரைத்தான். அவன் தன் கைவசமிருந்த அத்திரத்தை ஏவினான்.

கண்ணன் அனைவரையும் நிராயுதராக நிற்கும்படி அறிவித்தான்.

தெய்வ அத்திரம் ஆகையால் அது ஆயுதம் ஏந்தாதவர்களைத் தொடாமல் திரும்பிச் சென்றது. வீமன் மட்டும் கதாயுதமும் கவசமும் அணிந்திருந்தான். அந்தத் தெய்வ அம்பு வீமனைத் துரத்தியது. கண்ணன் அவன் உடம்பிலிருந்த கவசத்தையும், ஏந்தியிருந்த கதையையும் நீக்கு விக்குமாறு அறிவித்தான். வீமனும் அவ்வாறே செய்து தாக்குதலிலிருந்து தப்பினான்.

அதற்குள் வியாச முனிவன் வந்து அசுவத்தாமனுக்கு ஞான நல்லுரை நல்கினான்; வேள்வித் தீயில் பிறந்த திட்–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/247&oldid=1048264" இலிருந்து மீள்விக்கப்பட்டது