பக்கம்:மாபாரதம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

247


“களத்தில் மனம் பேதலித்த விசயனுக்குக் கீதையை உபதேசித்தாய்”

“களத்தில் படை எடேன் என்று சொல்லிய நீ மூன்றாவது நாள் சக்கரத்தை எடுத்தாய்”

“வீடுமன் இறக்கும்படி சிகண்டியைத் தக்கபடி பயன் படுத்தினாய்”

“பகதத்தன் என்பவன் வீசிய வேலை விசயன் மார்பில் படாமல் நீ உன் திரு மார்பில் ஏற்று அவனைக் காத்தாய்”

“அபிமன் இறந்த போது இந்திரனைச் கொண்டு நாடகம் நடத்தி அருச்சுனனைத் தீயில் விழாமல் காத்தாய். அன்று இரவே அவனுடன் கயிலை சென்று சிவனிடம் அம்பு கேட்டு வாங்கித் தந்தாய்”

வருணனின் மகன் சதாயு வீசிய கணையை உன் மார்பில் ஏற்று அவனை மரணமடையச் செய்தாய்”

“சங்க நாதம் செய்து பகைவர்களை மருளச் செய்தாய்”

“கண்ணா, நீ உன் சக்கரத்தால் சூரியனை மறைத்து விசயனின் சபதத்தை நிறைவேற்றச் செய்தாய்”

“அசுவத்தாமன் ஏவிய நாரண அத்திரத்தால் நிகழ இருந்த அழிவு அறிந்து பாண்டவரைப் படைக் கருவி களைக் கீழே போடும்படி செய்தாய்.” இவற்றையெல்லாம் கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/250&oldid=1047332" இலிருந்து மீள்விக்கப்பட்டது