பக்கம்:மாபாரதம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

மாபாரதம்


விசயன் “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலை விலாது உஞற்றுபவர்” என்ற குறட் கருத்தைத் தமையனுக்கு அறிவித்தான். “விதியை மதியால் வெல்லலாம்” என்று சொல்லி ஊக்கமளிப்பது போலத் தொடையைத் தட்டிக் காண்பித்தான். தம்பி தட்டிக்காட்டிய குறிப்பைக் கொண்டு தன் கதையைக் கொண்டு துரியனின் தொடைச் சதையை அடித்து அவன் வாழ்க்கைக் கதையை முடித் தான். அவன் துடித்து விழுந்து அலறினான். அந்த நிலை யிலும் முகுந்தனாகிய கண்ணனை நோக்கிக் கடிந்து பேசினான்: வீரம் இழந்து சூழ்ச்சியால் தன்னைத் தாக்கி யதாகக் குறை கூறினான்.

தனித்துப்போர் செய்ய வேண்டிய அவன் தம்பியின் சைகையைக் குறிப்பால் உணர்ந்து செயல்பட்டது விதியை மீறியதாகும் என்றான். அடித்து நொறுக்கப் பட்ட அவன் பேசிய கிறுக்கு மொழிகளைக் கேட்டுக் கொண்டிருக்க வீமன் விரும்பவில்லை. செருக்களத்தில் உருக்குலைந்திருந்த அவன் மணிமுடியைக் காலால் இடறி மிதித்து அப்புறப்படுத்தினான். மன்னவனின் மாமுடி சிதறியது; முடியாட்சியை எதிர்த்துச் செய்த முதல் புரட்சியாக அது அமைந்தது. பலராமனின் செல்லப்பிள்ளை துரியன் ஆதலால் அவன் நெஞ்சு கசிந்து உதிரம் பெருக்கியது. பலராமன் கதாயுதப் போரை இருவருக்கும் கற்றுக் கொடுத்தவன்; விதிகளை மீறித் துரியனைத் தாக்கியது தவறு என்று தான் கலப்பை ஏந்திக் கலகம் விளைவிக்க எண்ணினான். துளப மாலை அணிந்த கண்ணன் தடுத்து நிறுத்தித் துரியன் இதுவரை செய்த அடாத செயல்களை அடுக்கிக் கூறினான்.

பாஞ்சாலியை அவமானப் படுத்தியது மாபெரும் குற்றம்; மன்னிக்க முடியாத ஒன்று; அரச அவையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/261&oldid=1048273" இலிருந்து மீள்விக்கப்பட்டது