பக்கம்:மாயக் கள்ளன்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


11. உளுந்து வடை துTங்கிக்கொண்டிருந்த ஆத்மரங்கண் மாயக்கள்ளன் மலேயடிவாரத்திற்குக் கொண்டுவந்தானல்லவா? ஆத்மரங்கன் அங்கேயே கிடந்து நீண்ட நேரம் தூங்கின்ை. பிறகு, அவ னுக்கு விழிப்பு எற்பட்டது. மலேயடிவாரத்தில் இருக்கிற விஷயம் அவனுக்குத் தெரிந்தது. மறுபடியும் மலேயேறத் தொடங்கின்ை. இந்தத் தடவை அவன் ஒரு கிழவனேப் போல உருவமெடுத்துக் கொண்டான். அவன் மலேப்படியில் கால் வைத்ததும் மாயக் கள்ளன் வந்து சேர்ந்தான். வழக்கம் போலக் கதையை ஆரம்பித்தான்: “பழங்காட்டுர் என்று ஒரு சிறிய ஊர் இருந்தது. அங்கே வசிப்பவர்களெல்லாம் உழவர்கள். நிலத்தை உழுது சிரமப்பட்டு வேலை செய்கின்றவர்கள். அந்த ஊரிலே ஒரு கிழவன் வசித்து வந்தான். அவன் மிகவும் தந்திரசாலி. சிரமப்பட்டு வேலே செய்யமாட்டான். தந்திரத்தாலேயே அவன் வாழ்க்கை நடத்தி வந்தான். ஊராரைத் தந்திரமாக ஏமாற்றி எப்படியாவது வயிற்றுக்குச் சோறு தேடிக்கொள்வான். வீதியில் ஏதாவது ஒரு குழந்தை விளேயாடிக் கொண்டிருக்கும். அந்தக் கிழவன் யாருக்கும் தெரியாமல் அதை மெல்லக் கிள்ளிவிடுவான். குழந்தை அழத்தொடங்கும். உடனே அதைத் தூக்கிக்கொண்டு அதன் தாயிடம் ஒடுவான். 'அம்மா, குழந்தை எனே அழுதுகொண்டே நின்றது. நான் தூக்கிக்கொண்டு ஓடிவந்தேன். தங்க நகையெல்லாம் போட்டிருக்கிறது. யாராவது கிருடன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய்விட்டால் என்ன செய்வது?’ என்று தாயிடம் மா. க-7