பக்கம்:மாயக் கள்ளன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சொல்லுவான். 'அழாதே கண்ணு, அழாதே பாப்பா' என்று குழந்தையிடம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவான்.

அவர்கள் பிடித்து மேல் அதைக் கண்டதும் குழந்தையின் தாய்க்கு அந்தக் கிழவன் மீது அன்பு உண்டாகிவிடும். அவள் அவனுக்குச் சோறு போடுவாள். வீதியோரத்தில் உள்ள மரத்தில் யாராவது மாட்டைக் கட்டி வைத்திருப்பார்கள். அந்தக் கிழவன் ஒருவருக்கும் தெரியாமல் மாட்டை அவிழ்த்துவிட்டு ஓட்டிவிடுவான், மாடு கொஞ்ச தூரம் போன பிறகு அதன் சொந்தக்காரரிடம் ஓடுவான். "ஐயா, உங்கள் மாடு கட்டை அவிழ்த்துக்கொண்டு ஓடுகிறது. நான் போய்ப் பிடித்துக்கொண்டு வரட்டுமா?' என்று கேட்பான். அவர்கள் பதில் சொல்லுவதற்கு முன்னாலே அவன் ஓடிப் போய் மாட்டைப் பிடித்துக்கொண்டு வருவான், மாட்டின் சொந்தக் காரருக்குக் கிழவன் மேல் பிரியம் உண்டாகிவிடும். அன்று அவர் வீட்டிலே கிழவனுக்குச் சோறு கிடைக்கும். அந்த ஊரிலே ஒரு கிழவி இட்டிலி சுட்டு விற்று வந்தாள். அவள் இட்டிலி விற்கத் தன் வீட்டை விட்டு வெளியே போய் விடுவாள். அந்தச் சமயம் பார்த்துக் கிழவன் அவளிடம் போய், 'பாட்டி, உன் வீட்டுக்கு முன்னாலிருக்கும் கீரைப் பாத்தியில் யாருடைய வெள்ளாடோ புகுந்துவிட்டது. அதை நான் துரத்தி விட்டேன்' என்பான். கிழவி சந்தோஷத்தோடு அவனுக்கு ஓர் இட்டிலியும் அரையணாக் காசும் கொடுப்பாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/101&oldid=1277018" இலிருந்து மீள்விக்கப்பட்டது