பக்கம்:மாயக் கள்ளன்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ‘நீ கிழக் குள்ள நரியானால் என்னைப்போல ஊளையிடு பார்க்கலாம்' என்று சொல்லிவிட்டுக் குள்ள நரி நெடுநேரம் ஊளையிட்டுக் கத்திற்று. கிழவனால் குள்ள நரியைப் போல ஊளையிட முடியவில்லை. அவனுடைய் தந்திரம் குள்ள நரியிடம் பலிக்கவில்லை. ஓடத்தில் இருப்பவன் ஒரு மனிதன் என்று குள்ள நரி கண்டுகொண்டது. உடனே குள்ள நரி ஓடத்தைப் பிடித்து முதலையிருக்கிற பக்கமாக நடு ஆற்றிற்குத் தள்ளிவிட்டது. தள்ளிவிட்டதோடு அது சும்மா இருக்கவில்லை. 'முதலையாரே, முதலையாரே, ஓடத்திலே கிழவன் வருகிறான். பிடித்துக்கொள்; ஈரல் மட்டும் என் பங்கு' என்று சத்தம் போட்டுக் கூவிற்று. அதற்குள் ஓடமும் முதலையிருக்கிற பாறைக்குப் பக்கத்தில் வந்துவிட்டது. முதலை வாலால் தூக்கியடித்தது. ஓடம் குப்புறக் கவிழ்ந்து உடைந்தது. குடிசைக்குள் இருந்த கிழவன் வெளியே வந்து தண்ணீரில் விழுந்தான். முதலே அவனைப் பிடித்துக் கொண்டது. இவ்வாறு மாயக்கள்ளன் கதையைச் சொல்லிக்கொண்டிருக் கும்போதே ஆத்மரங்கன் தூங்கி விழலானான். தன்னை மறந்து அவன் மலைப்படியில் படுத்துக்கொண்டான். உடனே அவன் நன்றாகத் தூங்க ஆரம்பித்தான். மாயக்கள்ளனுக்கு மறுபடியும் வெற்றி கிடைத்துவிட்டது. அவன் குதூகலமடைந்தான். புன் சிரிப்போடு அவன் ஆத்மரங்கனைத் தூக்கிக்கொண்டு பழையபடி மலையடிவாரம் போய்ச் சேர்ந்தான். முகத் தூங்காயில் படுத்துங்கி விழலானா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/105&oldid=1277020" இலிருந்து மீள்விக்கப்பட்டது