பக்கம்:மாயக் கள்ளன்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


106 ஆவலோடு சாப்பிடத் தொடங்கினர். நான் நினத்தாலும் சொன்னலும் அதன்படியே ஆகிறது என்று அவர் எண்ணி மகிழ்ச்சியடைந்தார். பிறகு, அவர் அந்த இடத்திலிருந்து புறப்பட்டு, ஒரு சிறிய கிராமத்தின் வழியாக நடந்தார். அவர் தெருவிலே தாளத்தைத் தட்டிக்கொண்டே பாட்டுப் பாடிக்கொண்டு வருவதைக் கண்ட குறும்புச் சிறுவர்கள் சில பேர் சேர்ந்து கொண்டு, ஒரு வேடிக்கை செய்ய விரும்பினர்கள். ஒருவன் காக்கை வலிப்பு வந்தவனேப் போலத் தெருவிலே படுத்துக் கொண்டான். கைகளையும் கால்களையும் விலுக்கு விலுக்கென்று குறுக்கியும் நீட்டியும் உதறிக்கொண்டு, காக்கை வலிப்பு வந்தவனேப் போலப் பாசாங்கு செய்தான். மற்றவர்கள் அவனேச் சுற்றி நின்ருர்கள். அவன் கைகளையும் கால் களையும் அழுத்திப் பிடிக்க முயன்ருர்கள். தெருவழியாக வந்த பெருமாள் பக்தர் இந்தக் காட்சியைக் கண்டார். கைகளையும் கால்களையும் உதறிக்கொண்டிருந்த பையனப் பார்த்ததும் அவனப்பற்றி மற்ற சிறுவர்களிடம் விசாரித்தார். இவனுக்குக் காக்கை வலிப்பு வந்திருக்கிறது. அதனுல்தான் கைகளும் கால்களும் இப்படி இருக்கின்றன’ என்று அவர்கள் சொன்னர்கள். பெருமாள் பக்தருக்கு இரக்கம் உண்டாயிற்று. 'பெருமாளே, இவனுக்கு நோயெல்லாம் தீர வேண்டும். இவன் உடனே சுகம் பெற்று எழுந்தோடவேண்டும்’ என்று சொல்லிவிட்டு, அந்தப் பையன்மேல் தம் கையை வைத்துத் தடவினர். உடனே அந்தப் பையன் சிரித்துக்கொண்டே எழுந்து ஒட்டம் பிடித்தான். மற்ற சிறுவர்களும் சிரித்துக் கொண்டே அவனத் தொடர்ந்து ஓட்டம் பிடித்தார்கள். ’பெருமாள் பக்தருக்குக் கோவிந்தா என்று கூவிக்கொண்டே அவர்கள் ஒடிஞர்கள். சிறுவர்கள் கேலி செய்து சிரித்துக்கொண்டு ஓடுவதைப் பெருமாள் பக்தர் அறிந்துகொள்ளவில்லே. தமது வாக்குப்