பக்கம்:மாயக் கள்ளன்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5. ஞானமூர்த்தி ஆத்மரங்கன் தூக்கத்திலிருந்து விழித்துப் பார்த்தான். கதை கேட்டுக்கொண்டே துரங்கிவிட்டதால் மலையடிவாரத் திற்கு வந்து சேர்ந்ததை அறிந்துகொண்டான். அதனல் அவன் புதியதொரு வடிவம் எடுத்துக்கொண்டு மலேயுச்சிக்குப் போக மறுபடியும் முயன்ருன். இந்தத் தடவை அவன் கல்வியிலே சிறந்த மாணவனுக மாறினன். அப்படி மாறியதும் மலேயுச்சியை நோக்கி வேக மாக அடியெடுத்து வைத்தான். பழையபடி மாயக்கள்ளன் கதை சொல்லிக்கொண்டு கூடவே துணையாக வரலான்ை. வழியிலே மாணவன் தூங்கி விட்டால் மீண்டும் மலையடிவாரத்திற்குக் கொண்டுபோகப் படுவான். இந்த நிபந்தனேயும் மாருமல் இருந்தது. மாயக்கள்ளன் கதையைத் தொடங்கினன். ஆத்மரங்கன் என்ன உருவம் எடுக்கிருனே அதற்கு ஏற்றவாறு கதை சொல்லுவதில் அவன் திறமை வாய்ந்தவன். அப்படிக் கதை சொல்லி ஆத்மரங்கனே ஏமாற்ற வேண்டும் என்பது அவ னுடைய சூழ்ச்சி. அது ஆத்மரங்கனுக்குத் தெரியாது. அவன் உற்சாகத்தோடு கதையைக் கேட்டுக்கொண்டே மலேப்படி களில் காலெடுத்து வைக்கலானன். மாயக்கள்ளன் கதை சொல்லுகிருன்: "ஒரு வனத்திலே ஒரு முனிவர் தவம் செய்துகொண் டிருந்தார். அவரிடத்திலே பல பேர் சிஷ்யர்களாகச் சேர்ந்து கல்வி கற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களிலே ஒருவன்