பக்கம்:மாயக் கள்ளன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 f ஓர் அமாவாசை வந்தது. நாகவல்லி தனியாக எங்கோ போப்விட்டாள். அவள் போனதும் விக்கிரமன் தனது குதிரையின்மேல் ஏறிக்கொண்டு எட்டாவது வனத்திற்கு வேகமாகச் சென்ருன். அங்கிருந்த மாளிகையில் மாணிக்கக் கற்கள் எங்குப் பார்த்தாலும் குவியல் குவியலாகக் கிடந்தன. அனல், அங்கே யாரும் வசிப்பதாகத் தெரியவில்லை. விக்கிரமன் ஒவ்வொரு மண்டபமாக நுழைந்து பார்த்தான். கடைசியிலே இருந்த ஒரு சிறிய அறையில் கைதிகள் போல, பல பேர் அடைபட்டுக் கிடந்தார்கள். அவர்கள் கைகளில் விலங்கு பூட்டப்பட்டிருந்தது. இரும்புச் சங்கிலிகளால் அவர்களைக் கட்டிவைத்திருந்தார்கள். அவர்களில் ஒருவன் விக்கிரமனேப் பார்த்ததும், தம்பி எதற்காக இங்கே வந்தாப்? உடனே இங்கிருந்து ஓடிப்போ’ என்று கத்தினன். விக்கிரமன் அவன் வார்த்தையைக் கேட்டுப் பயப்படவில்லே. அவனருகே சென்று விசாரித்தான். அவர்கள் எல்லோரும். முதல் வனத்து மாளிகையிலிருக்கும் கிழவனேப் பார்த்துவிட்டு வந்தவர்கள். அவர்களே நேராக ஒன்பதாவது வனத்திற்குச் சென்று, ஐந்து தலே நாகத்தைக் கண்டு, அதன் வஞ்சனேயில் மயங்காமல் அந்த வேலே எடுத்துவரும்படி கிழவன் அனுப்பியிருந்தான். அவனுடைய வார்த்தைப்படி நடக்காமல், அவர்கள் எட்டாவது வனத்திலுள்ள மாளிகையில் புகுந்து மாணிக்கக் கற்களே எடுத்திருக்கிருர்கள். அப்படி அந்தக் கற்களை எடுத்தவுடனே, அவர்கள் கையிலும் சாலிலும் விலங்கு மாட்டிக்கொண்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். அந்த விலங்கை அறுத்தெறிய ஞானச் சுடர் வேலைக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் சொன்னர்கள். நல்ல வேளே. விக்கிரமன் மாணிக்கக் கற் க ளே த் தொடவில்லே. அவன் உடனே அங்கிருந்து புறப்பட்டான். செங்காற்று வேகமாகப் பாய்ந்து சென்றது. நாகவல்லி திரும்புவதற்கு முன்னலேயே விக்கிரமன் ஒன்பதாவது வனத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/64&oldid=867742" இலிருந்து மீள்விக்கப்பட்டது