பக்கம்:மாயக் கள்ளன்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8. ஈயாரே ! அணிலா ரே! போர் வீரகை உருவமெடுத்த ஆத்மரங்கன் மலேயடி வாரத்திலே படுத்துக் கிடந்தான். வெகுநேரம் வரையில் அவனுடைய தூக்கம் கலேயவில்லை. பிறகு அவன் விழித்தெழுந்தான். சுற்றிலும் பார்த்தான். மலேயுச்சிக்குப் போக வேண்டும் என்ற ஆசை அவனே விடவில்.ை பண மிருந்தால் எதையும் எளிதிலே சாதித்துவிடலாம் என்று. அவனுக்குத் தோன்றியது. உடனே அவன் ஒரு பெரிய பணக்காரகை உருவமெடுத்தான். பட்டு வேட்டி, ஜரிகை உருமாலே, ப ட் டுச் சொக் காய் ஆகியவற்றையெல்லாம் அணிந்துகொண்டான். அவன் கைவிரல்களிலே வைர மோதிரங்கள் ஜொலித்தன. இவ்வாறு அவன் முதற்படியிலே காலே வைத்ததும், கதை சொல்லுவதற்கு மாயக்கள்ளன் வந்து சேர்ந்தான். அவனேப்பற்றி ஆத்மரங்கனுக்கு ஒரு சந்தேகமும் ஏற்படவில்லே. மாயக்கள்ளன் தன்னே ஏமாற்றிக்கொண் டிருக்கிருன் என்று அவனுக்குத் தெரியவில்லே. மாயக்கள்ளன் கதையை ஆரம்பித்தான்: ஒைர் ஊரிலே ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். அவனுக்கு வயல்கள் ஏராளமாக உண்டு. ஆடுமாடுகள் ஆயிரக் கணக்காக இருந்தன. உயர்ந்த ஜாதிக் குதிரைகள் பல அவனுடைய லாயத்திலே காட்சியளித்தன. அவன் ஏழடுக்கு மாளிகையிலே வாழ்ந்து வந்தான். அவன் பெயர் தங்கமுத்து மாணிக்கம். தங்கமுத்துமாணிக்கம் என்ருல் பெரிய பணக்காரன் என்று அந்தப் பக்கமெல்லாம் தெரியும். இவ்வளவு பணக்காரகை இருந்தாலும் அவனுக்குப் பண ஆசை அடங்கவில்லே. மேலும் மேலும் பணம் சம்பாதிக்க