பக்கம்:மாயக் கள்ளன்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


77 குழந்தை ஊமையென்று தெரிந்ததும் வள்ளிநாயகியை அவளுடைய கணவன் வெறுத்தான். ஊமைக் குழந்தையைப் பெற்ற அவளே வீட்டைவிட்டு ஒட்டிவிட்டான். வள்ளிநாயகி தன் குழந்தையை எடுத்துக்கொண்டு, அந்தப் பட்டணத்திலே ஏழைகள் வசிக்கும் பாகத்திற்குப் போய், அங்கே ஒரு குடிசையில் வசிக்கத் தொடங்கிள்ை. குழந்தைக்கு ஆதிநாதன் என்று பெயர் வைத்தாள். பூக்களைக்கொண்டு மாலே தொடுத்து விற்கும் தொழிலே அவள் நடத்தத் தொடங்கிள்ை. வள்ளிநாயகி மாலே தொடுப் பதே ஒரு தனி அழகு. புதிது புதிதாக அவள் மாலே செய்வாள். அதனல், அவள் தொடுக்கும் மாலைகாே எ ல் ேலா ரு ம் ஆவலோடு வாங்குவார்கள். வள்ளி நாயகி ஒவ்வொரு நாளும் தொடுக்கின்ற மாலை களிலே முதல் மால் ஆதிலிங்கேசருக்குத்தான். அதை அதி காலேயில் அவருக்குப் போட்டுவிட்டுத்தான் வேறு காரியம் பார்ப்பாள். கடவுள் முன்னிலையில் அவள் நின்று, உலகத்தையே மறந்துவிட்டுத் தொழுவாள். தனது மகன் ஆதிநாதனுக்குப் பேசும் திறமை வர வேண்டும் என்றும், அவன் ஊமையாக இருக்கக்கூடாது என்றும் கடவுளே வேண்டுவாள். இவ்வாறு, பல வருஷங்கள் கழிந்தன. ஆதிநாதனுக்கு பதினெட்டு வயது ஆயிற்று. அதுவரையிலும் அவன் ஊமையாகவே இருந்தான். இத்தனே காலமாகக் கடவுளே வேண்டியும் அவன் ஊமை யாகவே இருப்பதைக் கண்டு வள்ளிதாயகி சலிப்படையவில்லை. அவளுக்கு ஆதிலிங்கேசரிடத்திலிருந்த நம்பிக்கையும் போக வில்லை. கடவுள் பக்தி அவளுக்கு அதிகமாக வ ள ர் ந் து கொண்டே இருந்தது. அவள் வயது முதிர்ந்த கிழவியாகி விட்டாள். தலையெல்லாம் வெள்ளே வெளேரென்று நரைத்து விட்டது. முதுகு கூனிவிட்டது. உடம்பு தளர்ந்துவிட்டது. இருந்தாலும், அவள் தான் தொடுக்கும் மாலேகளில் முதல் மாலையைக் கடவுளுக்குப் போடுவதில் ஒரு நாளும் தவறவில்லை. தன் மகனுக்குப் பேசும் திறமை வரவேண்டும் என்று வேண்டிக் கொள்வதிலும் தவறவில்லே.