பக்கம்:மாயக் கள்ளன்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6 நிற்கும் ஒரு கிழட்டு மரம் உண்டு. அதிலே அந்தக் குரங்கு எறி, ஒரு கிளையில் உட்கார்ந்துகொண்டு,தனதுதலேயில் செருகியிருந்த பூவை எடுத்தது. அதைப் பல்லிலே கடித்து, இதழ் இதழாகப் பிய்த்து அந்தப் பாதாளத்திலே போட்டது. ஆத்மரங்கன் தொப்பென்று பாதாளத்திலே விழுந்து வெகு நேரம் அப்படியே மயங்கிக் கிடந்தான். பிறகு, எப்படியோ அவனுக்கு மூச்சு வந்தது. மெல்ல எழுந்து மலேயடிவாரத்திற்கு ஓடி வந்தான். இந்தப் பூ வாழ்க்கையே வேண்டாம் என்று உறுதியாக முடிவு செய்து கொண்டான். ஆத்மரங்கன் மறுபடியும் யோசன செய்தான். பிறருடைய உதவியை எதிர்பார்த்தால் தனது ஆசை நிறைவேருது என்று அவனுக்குத் தோன்றியது. தனது சொந்த முயற்சியால் தான் மலேயுச்சிக்குப் போக முடியும் என்றும் தெரிந்தது. இருந்தாலும், அதிகமான முயற்சி செய்ய அவனுக்கு விருப்ப மில்லை. மெல்ல மெல்ல ஊர்ந்து போனல் போதும்; உடம்பை எதற்குக் கஷ்டப்படுத்த வேண்டும்? ஆனால், இந்தத் தடவை புல்ஃப் போலவோ பூவைப் போலவோ சாதுவாக இருக்கக் கூடாது. என்னேக் கண்டால் எல்லோரும் பயப்பட வேண்டும்.