பக்கம்:மாயக் கள்ளன்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


87 முடியாத இடமே கிடையாது. சந்திரனுக்குப் போக வேண்டு மாலுைம் அது இரண்டு மணியிலே போய்விடும். விஞ்ஞான பூதத்திற்குப் பசி அதிகம். அதனுடைய உணவு வேடிக்கையானது. அது தினமும் ஆயிரம் அணுகுண்டுகளைத் தின்னும். ஆயிரத்தில் ஒன்று குறைந்தாலும் அதன் பசி அடங்காது. அணுகுண்டுகனே இப்படித் தின்றுவிட்டதும் குடிப் பதற்கு ஹைட்ரஜன் குண்டுகளைக் கேட்கும். நூறு ஹைட்ரஜன் குண்டுகளைக் கொடுத்தால்தான் அதன் தாகம் அடங்கும். சோடாப் புட்டிகளே உடைத்துக் குடிப்பதுபோல, அது ஹைட் ரஜன் குண்டுகளைக் குடிக்கும். இந்த வகையான உணவிலே குறைவு ஏற்பட்டால் அதற்குக் கோபம் வரும்; மேலும் அது அணுவரக்கனேயே கடிக்கப்போகும். அணுவரக்கன் ஜாக்கிரதை யாக அதற்கு உணவு கொடுத்து வந்தான். இந்த விஞ்ஞான பூதத்தை உண்டாக்கியவுடனே அணு வரக்கன் தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள எண்ணினன். ,వా': o "ہم ुट्ट:.५-४..."क्रु ད་ཕལ་ པ་ལ་ بيل تم الاذ விஞ்ஞான பூதத்தின்மேல் ஏறிக்கொண்டு அவன் உலகத்தைச் சுற்றிச் சுற்றி வந்தான். நான்தான் உலகத்திற்கே சக்கர வர்த்தி. என்னே யாராவது எதிர்த்தால் அவர்களை உடனே