பக்கம்:மாயக் கள்ளன்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


88 கொன்றுவிடுவேன். எந்தத் தேசமாவது எனக்கு அடங்கி நடக்காவிட்டால் அந்தத் தேசத்தின்மீது விஞ்ஞான பூதத்தை விட்டு நெருப்பு மழை பெய்து பொசுக்கிவிடுவேன்’ என்று உரக்கக் கூவிஞன். கடலுக்கு மத்தியிலே ஒரு பெரிய தீவு இருந்தது. அந்தத் தீவிலுள்ளவர்கள் அணுவரக்கன் சொல்வதைக் கேட்டுச் சிரித்தார்கள். அவனப் பைத்தியக்காரன் என்று கேலி செய்தார்கள். அவனல் அப்படிப் பொசுக்க முடியாது என்று நிக்னத்தார்கள். அணுவரக்கனுக்குக் கோபம் வந்துவிட்டது. அவன் விஞ்ஞான பூதத்தை அந்தத் தீவின்மேல் எவினன்" அது ஒரு நொடியிலே அந்தத் தீவில் நெருப்பு மழையைக் கக்கிற்று. விஞ்ஞான பூதத்தின் வாயிலிருந்தும் மூக்கி லிருந்தும் கண்களிலிருந்தும் நெருப்புக் குழம்பு வெளிப்பட்டது. அந்தத் தீவு முழுவதும் ஒரு நாழிகை அளவுக்குள் வெந்து சாம்பலாகிவிட்டது. இதைப்பற்றி உலகத்திலுள்ள மற்ற ேத சத் த வ ர் களெல்லாம் கேள்விப்பட்டார்கள். பயந்து நடுங்கினர்கள். அமெரிக்காவும் ரஷ்யாவும் மட்டும் கொஞ்சம் தைரியமாக இருந்தன. தங்களிடத்திலே அணுகுண்டும், ஹைட்ரஜன் குண்டும் இருப்பதால் அந்தத் தேசங்கள் அணுவிரக்கண் எதிர்க் கலாம் என்று நிக்னத்தன. அணுவரக்கன் விஞ்ஞான பூதத்தின் மேல் எறிக்கொண்டு தங்களுக்கு முன்னல் வந்தபோது அந்தத் தேசங்கள் அணுகுண்டையும் ஹைட்ரஜன் குண்டையும் வீசின. விஞ்ஞான பூதம் அந்தக் குண்டுகளேயெல்லாம் வாயைத் திறந்து விழுங்கிவிட்டு எப்பமிட்டது. அதைக் கண்டு அந்தத் தேசங்களும் பயந்துபோய்விட்டன. அவைகளும் நடுங்க ஆரம்பித்தன. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தன. "நான்தான் உலகத்திற்குச் சக்கரவர்த்தி. எ ல் லா த் தேசத்து அரசர்களும் மந்திரிகளும், அரசியல் தவைர்களும் உடனே என்னிடம் வரவேண்டும். வந்து என்னேப் பணிந்து நான் சொல்லுகிறபடி அடங்கி நடக்கவேண்டும். இ ல் லா விட்டால் உலகத்தையே அழித்துவிடுவேன்' என்று அணு வரக்கன் கர்ஜனே செய்தான். அந்தக் கர்ஜனே உலகம் முழு வதும் கேட்டது.