பக்கம்:மாயக் கள்ளன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

92 ஒரு பூனையையும் விடாமல் எல்லாப் பூனைகளையும் கொன்று விட்டார்கள். உலகத்தில் பூனையே இல்லாமல் போய்விட்டது. பூனையில்லாததால் உலகத்தில் எலிகள் ஏராளமாகப் பெருகின. அவைகள் மக்களுக்கு வேண்டிய உணவுப்பொருள் களையெல்லாம் தின்று தீர்த்துவிட்டன. அதனால் மக்கள் பட்டினியாகக் கிடக்கவேண்டியதாயிற்று. அவர்கள் அணுவரக்கனிடம் சென்று முறையிட்டார்கள். எலிகளால் தங்களுக்கு நேர்ந்துள்ள ஆபத்தைப்பற்றிச் சொன்னார்கள். 'எலிகளையெல்லாம் ஒன்றுவிடாமல் கொல்லுங்கள்' என்று அணுவரக்கன் உத்தரவிட்டான். ஆனால், பூனைகளைக் கொன்றது போல் எலிகளைக் கொல்ல முடியவில்லை. அவைகள் தரையி

லுள்ள வளைக்குள் நுழைந்துகொண்டன. மனிதர் தூங்கும் சமயம் பார்த்து அவை வெளியே வந்து உணவையெல்லாம் தின்று விட்டு மறுபடியும் வளைக்குள் ஓடி ஒளிந்துகொண்டன. மக்கள் அணுவரக்கனிடம் சென்று, எலிகளைக் கொல்ல முடியவில்லையென்று சொன்னார்கள். எலிகளைப் பிடிக்க எலிப் பொறிகள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். 'எலிப்பொறி வேண்டுமானால் நீங்களே செய்து கொள்ளக் கூடாதா?” என்று அணுவரக்கன் கோபத்தோடு உறுமினான் . 'உலகத்திலே தொழிற்சாலை ஒன்றுகூட இல்லை. எல்லா வற்றையும் நீங்கள் அழித்துவிட்டீர்கள். அதனால் எலிப்பொறி செய்யவும் எங்களால் முடியவில்லை. எங்களுக்குச் சிறிய எந்திரம் செய்யவும் இப்பொழுது தெரியாது' என்று மக்கள் பணிவோடு தெரிவித்தார்கள். அணுவரக்கன் போசித்துப் பார்த்தான். இந்த மக்கள் உயிரோடிருந்தால்தானே தசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/95&oldid=1277016" இலிருந்து மீள்விக்கப்பட்டது