பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"நான் எப்போதும் இந்தப் புலிவாகனத்திலே தான் ஏறி வருவேன்.

“இத்தனை வல்லமை யிருந்தும் எனக்கு நிம்மதியில்லை.

"மனிதர்கள் எல்லாரும் என்னைக் கண்டு மருளுகிறார்கள். பேய்கள் எல்லாம் எனக்கு அடங்கி நடக்கின்றன. ஆனால், தேவதைகள் மட்டும் என்னைக் கண்டால் அஞ்சுவதில்லை. அவற்றையும் அடக்கி ஆளவேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டுவிட்டது. இதற்காக நான் அரக்கர்களின் மூல நாயகியான மூளியம்மனை நோக்கித் தவமிருந்தேன். அவள் தனக்கொரு பலி கேட்கிறாள். பேரழகு பொருந்திய ஒரு பெண்ணைத் தனக்குப் பலியிட்டால், அந்த வல்லமையை எனக்கு வரமாகக் கொடுப்பதாக மூளியம்மன் கூறினாள்.

"உலகத்திலேயே பேரழகு பொருந்திய பெண் யாரென்று நான் ஆருடம் பார்த்தேன். உன் மகள் இளவரசி செந்தாமரைதான் என்று தெரிந்து கொண்டேன். உடனே இங்கு புறப்பட்டுவந்தேன். என் ஆசைக் கனவுகள் நிறை

15