பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

115

வண்டிக்குப் பக்கத்திலும், தபால் வண்டிகளுக்குப் பக்கத்திலும் சில சமயங்களில் முதல் வகுப்பு இரண்டாவது வகுப்பு வண்டிகளைச் சேர்ந்திருப்பதையும் நான் பல தடவைகளில் பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லோரும் நல்ல அதிர்ஷ்டசாலிகள். அதற்குத் தகுந்த படி அன்றைய தினம் தற்செயலாக அவர்களுடைய வண்டிகள் பின்பக்கத்தில் கோர்க்கப்பட்டுப் போனால், பின்பக்கத்து வண்டிகளுக்கு அவ்வளவு கெடுதல் உண்டாகும் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் நினைக்கிறபடி ரயில் வண்டிகள் வெள்ளத்தில் மிதந்து போகும் என்று நான் எண்ணவில்லை. இஞ்சின், வேகமாய்ப் போய்த் தண்ணிருக்குள் புகுந்து மண்ணில் புதைந்து போகும். அதற்கு மேல் சில வண்டிகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து விழும். எல்லாவற்றிலும் வாசல், ஜன்னல் முதலியவை இருப்பதால், உள் பக்கத்தில் தண்ணீர் நுழைந்து கொள்ளும். ரயில் வண்டிகள் அதிக கனமாக இருக்கும். ஆகையால், ஒன்றன் மேல் ஒன்றாக எல்லாம் தண்ணீரில் அப்படியே உட்கார்ந்து கொள்ளும். பின்வண்டிகள் அநேகமாய் அப்படியே பாலத்தின் மேலேயே நின்றாலும் நின்றுவிடும். அல்லது அதன் மேலேயே சாய்ந்து விழுந்து, கிடந்தாலும் கிடக்கும். ஆகையால், நம்முடைய எதிரிகள் கட்டாயம் மாண்டு போவார்கள் என்பதை நாம் இப்போது திட்டமாக நிச்சயிக்க முடியாது. ஆனால் ஒரு விஷயம் மாத்திரம் நிச்சயம். ஒரு போட்மெயிலில் எல்லா வகுப்பு ஜனங்களும் சேர்ந்து சுமார் 1000 நபர்களாவது இருப்பார்கள். எத்தனையோ பெண்பிள்ளைகளும், குழந்தைகளும் இருப்பார்கள். நம்முடைய பகைவர்களான சுமார் ஏழெட்டு மனிதரைத் தண்டிப்பதற்காக நிரபராதியான ஆயிரம் ஜனங்களுக்குப் பெருத்த நாசத்தை விளைவிக்கும்படியான அவசியம் என்ன? எத்தனை ஜனங்கள் காயம்பட்டு ஓலமிட்டு அலறுவார்கள். அவர்களுள் நல்லவரும் இருப்பார்கள்; கெட்டவரும் இருப்பார்கள். அத்தனை பெயரும் வயிறெரிந்து கதறி அழும்படி செய்வது நியாயமாகுமா? நம்முடைய விரோதிகளுக்கு மாத்திரம் நாம் கெடுதல் விளைப்பதற்கு ஒருவித நியாயம் இருக்கிறது. அதைக் கருதி நாம் கசாப்புக் கடைக்காரர்களைப் போல பெருத்த