பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

117

பார்த்துவிட்டுப் போனபிற்பாடும், போட் மெயில் வருவதற்குள்ளும் அதை வெகு துரிதமாகச் செய்ய வேண்டும். தண்டவாளத்தைப் பெயர்ப்பதென்றால், அது எளிய காரியமல்ல. அதற்கு அதிக நேரமும் பிரயாசையும் பிடிக்கும். அப்போது பக்கத்திலிருந்து காவல்காரன் வந்தால், அவனை அடித்து வதைத்து, அவனுடைய உயிரை வாங்க வேண்டும். இவ்வளவு காரியத்தையும் நாம் திருப்திகரமாக முடித்தால், அப்போதும், நம்முடைய விரோதிகள் எல்லோரும் அழிந்து போவார்கள் என்ற நிச்சயம் கிடையாது. இந்தச் சங்கதிகளை எல்லாம் நன்றாக தீர்க்காலோசனை செய்து நீங்கள் உத்தரவு கொடுங்கள். அதன்படி நான் நிறைவேற்றத் தடை இல்லை.

மாசிலாமணி:- என்ன சேர்வைகாரரே! நான் எண்ணிய ஏற்பாட்டுக்குப் பெருத்த பெருத்த ஆட்சேபனைகளைச் சொல்ல ஆரம்பித்து விட்டீரே!

இ. சேர்வைகாரன்:- நீங்களே யோசித்துப் பாருங்கள். நான் சொல்வது உங்களுக்கு உசிதமாகப் படாவிட்டால் தள்ளி விடுங்கள்.

மாசிலாமணி:- (சிறிது யோசனை செய்து) சரி; அப்படியானால் இந்த உத்தேசத்தை இப்போது நிறுத்தி வைப்போம். வேறே என்ன விதமான யோசனை செய்யலாம் என்று நீர் எண்ணுகிறீர்? நீர் ஏதாவது ஒரு யோசனை சொன்னால், அதன்படி இப்போது நடப்போம். அதெல்லாம் பலிக்காமல் போகுமானால், இதைக் கடைசி அம்பாக வைத்துக் கொள்வோம். இந்தக் கலியாணம் அநேகமாய் சென்னைப் பட்டிணத்தில் தான் நடக்கும். இவர்கள் எல்லோரும் மறுபடி கலியாணத்திற்கு அங்கே போக நேரும். அப்போது வேண்டுமானால், ரயிலைக் கவிழ்க்கும் யோசனையை உபயோகப்படுத்திக் கொள்வோம். இப்போது வேறே ஏதாவது நல்ல யோசனையாகத் தோன்றினால் சொல்லும். அதை முடிப்போம். முதலில் திகம்பரசாமியாருடைய வேலை ஒழிய வேண்டும். இரண்டாவது, பட்டணத்தில் உள்ள மனோன்மணியம்மாள் சில தினங்களுக்குள் என்னிடம் வந்து சேர வேண்டும். மூன்றாவது, வேலாயுதம் பிள்ளை தயாரித்துள்ள