பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

153

என்பது நன்றாகத் தெரிகிறது. ஆகையால் நான் உன் மேல் கோபிப்பது சரியல்ல. ஆனாலும் இப்படிப்பட்ட கொடூரமான வார்த்தையை வேடிக்கைக்காக உபயோகப்படுத்தினால் கூட, அது என் மனசை நிரம்பவும் புண்படுத்துகிறது” என்றான்.

வடிவாம்பாள்:- (சந்தோஷமாகப் புன்னகை செய்து நிரம்பவும் கொஞ்சலாகப் பேசத் தொடங்கி) எப்படி இருந்தாலும் நாங்கள் மூடப் பெண்பிள்ளைகள் தானே. நாங்கள் வேடிக்கையாகப் பேச நினைத்தால் கூட, ஏதாவது தவறு ஏற்பட்டு விடுகிறது. உங்களைப் போன்ற ஆண்சிங்கங்கள் அதை எல்லாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். சகலமான விஷயங்களிலும் நாங்கள் புருஷர்களுக்கு அடங்கிக் கீழ்ப்படிந்து அவர்களுடைய பிரியப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது ஸ்திரீ தர்மம். ஆனாலும், இரண்டொரு சிறிய விஷயங்களில் எங்களுக்கு சில கொள்கைகள் இருக்கின்றன. அவைகளில் நாங்கள் உறுதியாகவும் பிடிவாதமாகவும் இருக்கத்தான் வேண்டும். முன்காலத்தில் இருந்து என்றும் அழியாக் கீர்த்தி வாய்ந்த உத்தம ஸ்திரீகள் எல்லாம் அப்படிப்பட்ட கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடித்து வந்தார்கள் என்றும், அவை அவசியமானவைகள் என்றும் நான் சில சாஸ்திரப் புஸ்தகங்களில் படித்திருக்கிறேன். நல்ல குலத்தில் உதித்த ஸ்திரீகள் அநேகர் அந்த மாதிரி நடப்பதையும் நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். அப்படி நடந்துகொள்வதுதான் உத்தம ஜாதி ஸ்திரீகளுடைய லட்சணம் என்று அம்மாள் முதலியோர்களும் எனக்குப் பல தடவைகளில் சொல்லி இருக்கிறார்கள். அதனால் தான் நான் எந்த விஷயத்திலும் நீங்கள் காலால் இடும் வேலையைத் தலையால் செய்கிறவளாய் இருந்தும் இந்த விஷயத்தில் மாத்திரம் அவர்கள் சொல்லுகிறபடி நடக்கிறேன்.

கண்ணப்பா:- (வியப்படைந்து) ஒகோ இது உன்னுடைய சொந்தப் பிடிவாதம் என்றல்லவா நான் இதுவரையில் நினைத்தேன். இதற்கு நீ சாஸ்திர ஆதாரத்தையும் பெரியவர் களுடைய கட்டளையையும் மேற்கோளாகக் கொண்டுவர ஆரம்பிக்கிறாயே. நீ குறிக்கும் கொள்கை இன்னதென்பதே